பழங்களை
நீண்ட நாட்கள் நற்பதமாக வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமானது தான். குறிப்பாக
வாழைப்பழத்தை 2 நாட்களுக்கு மேல்
வீட்டில் வைத்திருந்தால், அது அழுக ஆரம்பித்துவிடும். ஆனால்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைப்பழத்தைப் பராமரித்து வந்தால், வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்களுக்கு மேல்
நன்றாக இருக்கும். சரி, இப்போது அது எப்படி என்று காண்போம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் 1
முதலில்
வாழைப்பழங்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 2
பின்பு பிளாஸ்டிக்
கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 3
வாழைப்பழங்களை
படத்தில் காட்டியவாறு, மேல் பகுதியில்
பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொள்ளுங்கள். இதனால் வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல்
அப்படியே இருக்கும்.
வாழைப்பழம்
விரைவில் பழுக்க...
வாழைப்பழம்
விரைவில் பழுக்க வேண்டுமானால், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள். இதனால் அதிலிருந்து
எத்திலின் வாயு அதிகம் வெளியேறி, விரைவில் பழுக்கச்
செய்யும்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON