Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: WhatsApp மெசேஜ் படிக்கப்பட்ட துல்லியமான நேரம் , மெசேஜ் யார் யாரால் படிக்கப்பட்டது என்பதை தெரிய?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
Android iPhone Tips and Tricks WhatsApp   வாட்ஸ் அப்  மெசேஜ் படிக்கப்பட்ட துல்லியமான நேரம் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் அனுப்பிய மெசேஜ் ய...
Android iPhone Tips and Tricks WhatsApp  வாட்ஸ் அப்  மெசேஜ் படிக்கப்பட்ட துல்லியமான நேரம் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் அனுப்பிய மெசேஜ் யார் யாரால் படிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை உபயோகிக்கும் அனைவருக்குமே மிகவும் பழகிய ஒரு செயலி தான் இந்த வாட்ஸ்அப். இன்று உலகில் பாவிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் 80 சதவீதத்திற்கும் மேலான ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

தனக்கென்று பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு பயனுள்ள பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கும் குறிப்பிட்ட ஒரு வசதி எம்மில் பல பேருக்கு இன்று வரை தெரியாது.

வாட்ஸ்அப்-இல் நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் எமக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஆனால் நாம் அனுப்பிய செய்தியை குறிப்பிட்ட ஒருவர் படித்ததாக வாட்ஸ்அப்-இல் காட்டப்படும் நேரம் மிகவும் சரியான நேரம் இல்லை. ஆகவே இன்றைய பதிவில் நீங்கள் அனுப்பிய செய்து குறிப்பிட்ட ஒருவாரால் சரியாக படிக்கப்பட்ட நேரம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

உங்களது வாட்ஸ்அப் கணக்கில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ சிறிது நேரம் அழுத்திக்கொண்டு இருங்கள்.

அடுத்து அந்த மெசேஜ் கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்.
  

அதிலே மேலே Info என்று இருப்பதில் கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறிப்பிட்ட மெசேஜ் உங்கள் நண்பரை சென்றடைந்த சரியான நேரம் மற்றும் அந்த மெசேஜ் உங்கள் நண்பரால் படிக்கப்பட்ட சரியான நேரம் என்பவற்றை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
  


இதே போன்று வாட்ஸ் அப் குழுக்களின் நீங்கள் அனுப்பிய மெசேஜ் யார் யாருக்கு சென்றடைந்து உள்ளது, யார் யாரால் படிக்கப்பட்டு விட்டது என்ற தகவல்களை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள அதே முறையை பயன்படுத்தி உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் குழுவில் உள்ள யார் யாருக்கு சென்றது யார் யாரால் படிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ சிறிது நேரம் அழுத்தி பிடித்துக்கொண்டு இருங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் Info என்பதை கிளிக் செய்யுங்கள்.



இப்போது மேலே  படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் நீங்கள் அனுப்பிய குறிப்பிட்ட மெசேஜ் யார் யாருக்கு சென்றடைந்து உள்ளது, யார் யார் அந்த மெசேஜ்-ஐ படித்து உள்ளார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top