Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பெண் குறியைச் சுற்றியுள்ள‍ தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பெண் குறியைச் சுற்றியுள்ள‍ தோல் , கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல்...

பெண் குறியைச் சுற்றியுள்ள‍ தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:
பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிக மா சிவந்த நிறம் உடையவர்களின் அக்குள் பிர தேசம், தொடை இடுக்கு , பிறப்புறுப்பை சுற்றி உள்ள பகுதிகள் உடலின் மற்ற பகுதியைக் காட் டிலும் நிறம் மங்கி கறுத்தே காணப்படும். இதற் கான காரணம் பலருக்கும்
புரியாமல் இருக்கலாம்.

(ஆண்களுக்கு இந்த நிற மாற்றம் எந்த பாதிப் பையும் மனதில் உருவாக்குவதில்லை. பெண்க ளே அதிகம் வருந்துகின்றனர்):
நம் நாட்டில் வெப்பம் அதிகம். அதனால் வியர் வை அதிகம் சுரக்கும். குறிப்பாக மறைவிடங்க ளில் உருவாகும் வியர்வை உலராமல் அப்படி யே ஈரமாகவே இருக்கும். சரி காரணங்களைப் பார்ப்போம்.

1. பருத்தி அல்லாத செயற்கை இழையால் ஆன உள்ளாடைகளை உபயோகித்தல். இதனால், வியர்வை உறிஞ் சப்படுவது இல்லை. மாறாக அந்த வியர்வை அங்கேயே தங்கிவிடுகிறது. மேலும் நாம் நடத்தல், வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகையில் அங்கே அதிகப்படியான உரா ய்வு ஏற்படுகிறது. மறைவிடங்களில் உள்ள தோல்ப் பகுதியானது மற்ற இடங்களில் உள் ளதை விட மிகவும் மென்மையானது. தொட ர்ந்து ஏற்படும் இந்த உராய்வினால் அந்த தோ ல் பகுதி கருமையாகத் துவங்குகிறது, நாள டைவில் ஒரு தழும்பைப்போலவே மாறி கருமை நிறமாகவே மாறி விடுகிறது.

2. அடிக்கடி மறைவிடத்தில் உள்ள ரோமங்களை சவரம் செய்வ தால் தோல் பகுதி கடினமாகி கறு த்து விடுகிறது. சில பெண்கள் ரோ மங்களை அகற்ற சில ரசாயனம் மிகுந்த கிரீம்களை உப யோகிக் கின்றனர். அவற்றின் ரசாயனக் கலவை தோலைக் கருமையாக்கி விடும்.

3. ஈரம் அதிகமாய் இருந்தால் கிருமித் தொற்று தல் மிக அதிகமாய் இருக்கும். புண் அல்லது அரிப்பு போன்றவை ஏற்பட்டு கருமயாக்கி விடும்.

தீர்வு:
பெண்கள் பருத்தி அல்லாத செயற்கை இழையி னால் நெய்த உள்ளா டைகளை தவிர்த்து, பருத் தியால் ஆன உள்ளாடைகளையே கட்டாயம் அணிய வேண்டும். அதனால் வியர்வை உறிஞ் சப்படும். மேலும் அதிக இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியாமல், சற்று தளர் வான ஆடைகளை அணியலாம். இந்த இறுக்க மான ஆடைகளே வியர்வையுடன் சேர்ந்து அதி கப்படியான உராய்விற்கு காரண மாகிறது. உரா ய்வு தவிரக்கப்படாலே பாதி பிரச்னை சரி ஆகி விடும். அதேபோல குளித்த பின்பு மறைவிடங்களில் உள்ள நீரை முற்றி லும் உலரும் வரை துடைத்து எடுத்து விட வேண்டும். அவை எவ் வளவு உலர்வாக உள்ளதோ அவ்வளவு நல்லது.
மேலும், ரசாயன ரோம அகற்றிகளை தவிர்க் கவும். அதற்கு பதில் வாக்சிங் (waxing) மூலம் ரோமங்களை அகற்றலாம்.

அடிக்கடி சவரம் செய்யாமல் சற்று இடை விட்டு. சவரம் செய்தல், ரோமங்களை வெட்டி விடுதல் நிச்சயம் தோலை பாதிப் பிலிருந்து காக்கும்.

கருமை நிறத்தைப் போக்க சில வீட்டு வைத் திய முறைகள்:
1. எலுமிச்சம் பழத்தை கருமையா பகுதிகளில் சில துளிகள் பிழிந்து விட்டு, மெதுவாக மசாஜ் செய்துவிடலாம். அப்படி செய்கையில் எலுமிச் சை சாறு பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் சென்று விடா மல் பார்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு எரிச்சலைக் கொடு க்கும்.

2. தயிர் கொஞ்சம் எடுத்து அந்த பகுதிகளில் பூசி மசாஜ் செய்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

3. 1 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 10 துளிகள் பன்னீர் துளிகள்சேது குழைத்து அதை அந்த பகுதிகளில் இட்டு, அரை மணிநேரம் கழித்து கழுவி விடலாம்.
உங்களுக்கு எது வசதியோ அதை செய்து கொள்ளுங்கள். இந்த வீட்டு வைத்திய முறைகள், முழுமை யாக நிற மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. இருந்தாலும் லேசா ன நிறமா ற்றம் தரும்.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top