Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: அருவதா, RUTA GRAVEOLENS.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
1) மூலிகையின் பெயர் -: அருவதா. 2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS. 3) தாவரக்குடும்பம் -: RUTACEAE. 4) வேறு பெயர்கள் -: சதாப...

1) மூலிகையின் பெயர் -: அருவதா.

2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS.

3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.

4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை.

5) தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிரத்தில் இருக்கும். இலைகள் 3 - 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, , முதலியன வராது.


6) பயன்படும் பாகம் -: சதாப்பு இலை மற்றும் வேர்.
  

7) மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.

இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.


உபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.
   

இன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும், மாத்திரை களாகவும் செய்வதுண்டு, அவற்றுள் சில முக்கிய முறைகளாவன.

சதாப்பிலைச் சூரணம் - நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்1 தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 - 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும். இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.

சதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8,கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டுவிராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறு, உழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துக. இதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம், வலி, மாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top