என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக
வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில்
கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும்
வாடிக்கையான நிகழ்ச்சிகள்.
ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.
பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.
ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.
வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை
பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல்
நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில்
தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து
விடுகிறது.
ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின்
உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம்
அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம்.
அப்போது என்ன செய்யலாம்?
சட்டம் வழங்கும் தற்காப்புரிமை
இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து
உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை,
உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக்
கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்”
(ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.
இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக
கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.
இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை
கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக
நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து
மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு
தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள்
கூறியுள்ளனர்.
உடல் தற்காப்புரிமை
இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை
இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.
பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும்
பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.
பிரிவு 97: முதலாவதாக, தனது
உடலையும், மற்ற உடலையும், மனித உடலை
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.
இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும்
அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட
குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை
அனைவருக்கும் உண்டு.
இந்த பிரிவின்படி நமக்கோ, நமது
சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின்
மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த
எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.
பிரிவு 98: இளமை, புரிந்து
கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை
இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும்,
அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.
அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ,
மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின்
ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின்
கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ,
போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு
பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை
செயல்படவே செய்யும்.
பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும்
என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-
(i) ஒரு
பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி
செய்யப்பட்டால் அந்த செய்கையானது...
(ii) ஒரு
பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால்,
அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது
ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப்
பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.
2. எச்சமயத்தில்
ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால்,-
(i) ஒரு
பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை
பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.
(ii) ஒரு
பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு
உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.
3. காக்கும்
நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை
உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது.
காவல்துறை அதிகாரி, பொது
ஊழியர் ஆவார். இவர் நம்மை கைது செய்தால் அது நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும்
செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்த செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த
கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும்.
ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி
என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே
மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில்
நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை
பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும்.
வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின்
தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.
மரணம் விளைவிக்கலாமா?
பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும்
பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது.
தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை
உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை
எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு
தாக்குதலின்போது,
3. வன்புணர்ச்சி
செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,
4. இயற்கைக்கு
மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,
5. ஆட்கவரும்
அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,
6. சட்டபூர்வமான
பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை
முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,
மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு
உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும்,
அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த
சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை
ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.
பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப்போகிறது
என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப்பொறுத்து
தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும்
நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில்
எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே
பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ,
கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல்
தற்காப்புரிமையை பயன் படுத்தலாம்.
அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ,
இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத்தெரியும்
போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.
ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன்
மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் பொது அதிகாரிகளான காவல்துறை
அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல்
தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.
பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம்
உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும்
தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத
சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது.
தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி
அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20
அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து
நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர்
தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும்
தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க
நேரிடினும் அது குற்றம் அல்ல.
இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக்கண்டு
தப்பியோடும்போது அவரைப்பிடித்து தாக்கக்கூடாது.
நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முடற்சித்தால்
தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை
அவர் அடைத்துவைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது.
காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.
சொத்து தற்காப்புரிமை இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை
குறித்த அம்சங்களை விளக்குகின்றன.
பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும்
அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல்
போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி
செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.
பிரிவு 103: கொள்ளை, இரவில்
வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம்
செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு
மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை
உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை
பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது
குற்றமாகாது.
பிரிவு 104: பிரிவு 103ல்
கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல்
அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும்,
அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு
எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.
பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர்
அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை
தொடங்குகிறது.
திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும்
அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.
குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை
தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.
இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை
தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.
பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள்
கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம்.
ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது.
இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள
சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது.
எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில்
திருட்டு, கொலை, கொள்ளை,
பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும்
சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.
பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக
(தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான்.
பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.
இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில்
காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள்
உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும்
தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON