Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? / தமிழ் மொழியின் சிறப்புகள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன்  தமிழை வளர்க்க முடியவில்லை ? ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற  நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கரு...
ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள்
கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத்
தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின்
சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும்.

தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.
ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த
தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ

உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய்
மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா?

தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம். தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு.  

தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது.

ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி.
இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும்.

வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழிஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி,ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி.
அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் ‘BOOK’ என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B – பி, o – , o – , k – கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது.

இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம்.  ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக ‘ARAVAIND’ என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் ‘ANGEL’ என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே ‘A’ என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப என்றும் ’ என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில்
இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது,அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில்
குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில்இரு குறில்கள் வந்தாலும்
அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. 

ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது.

ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாதுஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’
என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக  “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும்குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள்.

மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!




About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top