கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக முட்டம் திகழ்கிறது. பல
திரைப்படங்களில் அழகுபட காண்பிக்கப்பட்டதும் 'கடலோரக்
கவிதைகள்' படத்தின்
கதைத்தளமாய் அமைந்ததுமான முட்டம் பற்றிய பதிவொன்றை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.
குமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். கிட்டத்தட்ட நூறு
வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை
விளக்கம் ஒன்றும் இங்குள்ளது.
கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும்
அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.
சொத்தவிளை
பீச்சைப் போல இது குளிப்பதற்கு ஏற்ற கடற்கரை
இல்லை.
இங்க அலையின் வேகம் அதிகமாக இருக்கு பெரிய
பெரிய அலைகளாக, ஆள் உயர அலைகளாக வருது. அலைகள்
ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.பார்ப்பதற்கே
பயமா இருக்கும் அதையும் மீறி, தைரியமா கால் நனைக்கப்
போனா, அது நமக்கு பாதுகாப்பு இல்லை குளிப்பதற்காக
வந்து வாரம் ஒருத்தராவது, கடலில் மூழ்கி இறந்துடராங்க

. அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் போகக்கூடாது என்பதற்காக ஆங்காங்கு இரும்புக்
கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள்
வளைந்தும், உடைந்தும் போயிருப்பதைப் பார்த்தாலே, அது நமக்குப் புரியும்.இங்க ரொம்ப
பழமையான கலங்கரைவிளக்கம் ஒன்று இருக்கு. மேலும் கரையிலிருந்து பீச்சைப் பார்க்க, நிறைய சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன.
குடில்கள்போல அமைத்து, அதுல வட்ட வடிவ பெஞ்சுகள் கட்டியிருக்காங்க. இதனால பீச் அழகாகவும், சுத்தமாகவும்
இருக்கு. முட்டம்
பீச்சுக்குப் போற வழியில் செம்மண் கரடு ஒன்று இருக்கு. செக்கச்செவேல்னு பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிற இங்கும் நிறைய சினிமா ஷூட்டிங் எடுத்திருக்காங்க.
முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை
மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகை ஏராளமான சுற்றுலாப் பயணிகள்
வந்து செல்கின்றனர்
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின்
ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.