இறப்பதற்கு முன் பிரபல மனிதர்கள் கூறிய கடைசி வார்த்தைகள்!
இறப்பதற்கு முன்னர் யாராக இருப்பினும் ஏதேனும் முக்கிய செய்தி அல்லது அவர்களுக்கு பிடித்தமான நபர்களிடம் அவர்கள் கூற விரும்பும் வார்த்தைகளை தான் கூறுவார்கள். மேலும், இறக்கும் தருவாயில் யாரும் பொய் கூற மாட்டார்கள் என்பது அனைவரின் பொதுவான நம்பிக்கை.
சிலர் இறக்கும் போது கூறும் வார்த்தையில் ஆழ்ந்த பொருளும் அடங்கியிருக்கும். பொதுவாகவே பிரபலங்கள் மற்றும் சான்றோரின் வார்த்தைகள் ஓர் முன் உதாரணமாக தான் எடுத்துக் கொள்ள படுகின்றன. இவர்கள் இறக்கும் முன் கூறிய வார்த்தைகள் பொன் எழுத்துக்களாகவே உலக ஏட்டில் பதிக்கப்படுகின்றன.
இனி, இறப்பதற்கு முன் பிரபலங்கள் கூறிய கடைசி வார்த்தைகள் பற்றி காணலாம்...
அப்துல் கலாம்
"விளையாட்டு பசங்களா? நல்லா பண்ணிங்களா?" இது தான் மாணவர் ஜனாதிபதி கடைசியாக பேசிய வார்த்தைகள்.
கார்ல் மார்க்ஸ்
கடைசி வார்த்தைகள் முட்டாள்களுக்கானது, அது ஒரு போதும், முழுமையாக கூறப்படுவதில்லை. என கார்ல் மார்க்ஸ் இறப்பதற்கு முன்னர் கூறினார்.
பீத்தோவன்
இசை மேதை பீத்தோவன் தான் இறப்பதற்கு முன்னர், "நண்பர்களே நன்கு கைத்தட்டுங்கள், காமெடி முடியப் போகிறது" என கூறினார்.
இளவரசி டயானா
கார் விபத்தில் இறப்பதற்கு முன்னர் இளவரசி டயானா, "ஓ கடவுளே, என்ன நடந்தது?" என கூறினாராம்.
சே-குவேரா
புரட்சியாளர் சே தான் இறக்கும் முன்னர், "வா கோழையே, நீ என்னை சுட வந்திருக்கிறாய். ஆனால், நீ கொல்ல போவது ஓர் மனிதனை மட்டும் தான்."
மால்கம் எக்ஸ்
மனித உரிமை புரட்சியாளர் மால்கம் எக்ஸ் தான் இறக்கும் போது, " சகோதரர்களே, சகோதரர்களே, இது அமைதிக்கான வீடு (உலகம்)" என கூறினார்.
மொஸார்ட்
பிரபல இசை அமைப்பாளர் மொஸார்ட் தான் இறக்கும் போது, "மரணத்தின் ருசியானது இதழ்களுக்கு மேலே உள்ளது, பூமிக்கு மேல் அல்ல" என்று கூறினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனதின் முதன்மை செயலாளர் ஸ்டீவ் தான் இறக்கும் போது, "ஓ வாவ்... ஓ வாவ்... ஓ வாவ்" என்று கூறினார்.
பாப் மார்லி
பிரபல ரெக்கே பாடகர், பாடலாசிரியர், அமைதியை விரும்பிய மனிதர், "பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது" என கூறினார்.
ஜாக் டேனியல்
பிரபல விஸ்கி நிறுவன வியாபாரி ஜான் டேனியல் தான் இறக்கம் தருவாயில், "ஒரு கடைசி ட்ரின்க் ப்ளீஸ்" என்று கூறினார்.
அன்னை தெரேசா
"இயேசுவே உன்னை நேசிக்கிறேன், இயேசுவே உன்னை நேசிக்கிறேன்.." என்று கடைசியாக அன்னை தெரேசா கூறினார்.
இந்திராகாந்தி
இந்திராகாந்தி தான் இறக்கும் முன்னர் கடைசியாக கூறிய வார்த்தை, "நமஸ்தே".
காந்தி
கோட்சே துப்பாக்கியால் சுட்ட போது, கீழே விழுந்த நொடியில் காந்தி கூறிய கடைசி வார்த்தை "ஹே ராம்"
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON