Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூன் 19 புனிதர் ரோமுவால்ட் (St.Romuald)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூன் 19  புனிதர் ரோமுவால்ட்  (St.Romuald) சபை நிறுவனர்/ மடாதிபதி : (Founder/ Abbot) பிறப்பு : கி.பி. 951 ரவென்னா (Rav...
இன்றைய புனிதர் ஜூன் 19 புனிதர் ரோமுவால்ட் (St.Romuald)
சபை நிறுவனர்/ மடாதிபதி : (Founder/ Abbot)
பிறப்பு : கி.பி. 951 ரவென்னா (Ravenna)
இறப்பு : ஜூன் 19, 1027 வால் டி காஸ்ட்ரோ (Val di Castro)
நினைவுத் திருநாள் : ஜூன் 19
ரோமுவால்ட் ஓரு “கமால்டோலிஸ்” (Camaldolese Order) சபையின் நிறுவனரும், “ஆழ்ந்த தியானத்தின் மறுமலர்ச்சி” என பெயர் பெற்ற ஏழாம் நூற்றாண்டின் பிரபலஸ்தருமாவார்.
                                      Saint Romuald, in St. Biagio Church at Fabriano
ரோமுவால்டின் மரணத்தின் சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர் இவரது சரித்திரத்தை எழுதிய புனிதர் “பீட்டர் தமியான்“ (St. Peter Damian) அவர்களின் கூற்றின்படி, ரோமுவால்ட் வட கிழக்கு இத்தாலியின் “ரவென்னா” (Ravenna) மாநிலத்தில் உயர்குல குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை “செர்ஜியஸ் டெக்லி ஓனேஸ்டி” (Sergius degli Onesti) ஆவார். தாயாரின் பெயர் “டிரவர்சரா டிரவர்சரி” (Traversara Traversari) ஆகும்.
இவர் தமது இளம் வயதில், பத்தாம் நூற்றாண்டின் ஒரு பிரபுத்துவ இளைஞனைப் போன்று உலக பாவ காரியங்களிலும் சொகுசான வாழ்விலும் மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை, இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரிலேயே கொலை செய்தார். மனம் வெறுத்துப்போன ரோமுவால்ட், “புனித அப்போலினர் திருத்தலம்” (Basilica of Sant'Apollinare in Classe) சென்று நாற்பது நாட்கள் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். உறுதியற்ற மனநிலை காரணமாக, ரோமுவால்ட் அங்கேயே துறவியானார். கடும் தவம் புரிந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது, இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி, முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் “ஃபிரனீஸ்” (Franis) மலைப்பகுதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இத்தாலி முழுதும் பயணித்து துறவு மடங்கள் மற்றும் ஆசிரமங்களை நிறுவதிலும் புனரமைப்பதிலும் செலவிட்டார்.
                                       Saint Romuald, in St. Biagio Church at Fabriano
தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்து கொடுத்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே “கமல்டொலி” (Camaldoli) என்ற இடத்தில், “அப்பினைன்” (Apinain) என்ற மலையுச்சியில் 1012ம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் “கமல்டொலி’ல்” (Camaldoli) நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ துறவியர்க்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெற்றுக்கொண்டு அங்கே மௌனம், தனிமை, ஆகியவற்றுக்கிடையே இறை பணிபுரிந்தனர். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தனர். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமைதியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்புக் கூற்றுகளாக அமைந்திருந்தது. கி.பி. 1086ம் ஆண்டிலிருந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" (Camaldolese) மடங்கள் தொடங்கப்பட்டன. 
                                             Tomb of Saint Romuald, in St. Biagio Church at Fabriano
இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தன. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top