† இன்றைய புனிதர் † (Saint of the Day) (மார்ச்/ March 7)
✠ புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டி ✠ (Saints Perpetua and Felicity)
மறைசாட்சியர் : (Martyrs)
பிறப்பு : 2ம் நூற்றாண்டு கார்தேஜ்
இறப்பு : சுமார் 203 கார்தேஜ், ஆபிரிக்காவின் ரோம பிராந்தியம் (தற்போது துனீசியாவில்)
(Carthage, Roman Province of Africa (modern-day Tunisia)
(Carthage, Roman Province of Africa (modern-day Tunisia)
நினைவுத் திருவிழா : மார்ச் 7
பாதுகாவல் :
தாய்மார்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள்,
பண்ணையாட்கள், கசாப்புக்காரர்கள், கார்தேஜ், கட்டலோனியா
தாய்மார்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள்,
பண்ணையாட்கள், கசாப்புக்காரர்கள், கார்தேஜ், கட்டலோனியா
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர்களான பெர்பெச்சுவா, (Perpetua) ஃபெலிஸிட்டி (Felicity) மற்றும் அவர்களின் தோழர்களின் கிறிஸ்தவத்திற்கான மறைசாட்சியம் அல்லது உயிர்த்தியாகம் சம்பந்தமான இலக்கியங்கள் மிகவும் தொன்மையான, பழமை வாய்ந்த படைப்புகளாக மதிக்கப்படுகின்றன. இவ்விலக்கியப் படைப்புகள், லத்தீன் மற்றும் கிரேக்க (Latin
and Greek) மொழிகளில் உள்ளன.
"The Passion of St.
Perpetua, St. Felicitas, and their Companions" என்னும் நூல் இவர்களின் மறைசாட்சியத்தினை விவரிக்கும் நூலாகும். கத்தோலிக்க திருச்சபையில் திருப்பலியில் பெயர் குறிப்பிடப்படும் புனிதர்களுல் இவர்களும் அடங்குவர்.
"விபியா பெர்பெச்சுவா", (Vibia Perpetua) சுமார் 22 வயதுடைய, அழகிய, நன்கு கற்றறிந்த, உயர்குடியினைச் சேர்ந்த, திருமணமான, ஒரு கைக்குழந்தையின் இளம்தாய் ஆவார். இவரோடு மறைசாட்சியாக மரித்த இவரின் அடிமைப் பெண்ணான ஃபெலிஸிட்டி (Felicity)
கருவுற்றிருந்தார்.
பெர்பெச்சுவா'வின் தாயார் ஒரு கிறிஸ்தவர் ஆவார். ஆனால் அவரது தந்தையோ ஒரு 'பாகன்' விசுவாசி ஆவார். அவரது தந்தை தொடர்ந்து அவரை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் பெர்பெச்சுவா அதற்கு மறுப்பு தெரிவித்துக்கொண்டேயிருந்தார். அடங்கா கோபமுற்ற அவரது தந்தை, பெர்பெச்சுவா'வை அவரது 22ம் வயதில் பிடித்து சிறையிலடைத்தார்.
சிறைச்சாலையின் எண்ணற்ற துன்புறுத்தல்களின் பின்னரும் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தினை கைவிட மறுத்துவிட்டனர். பெர்பெச்சுவா, ஃபெலிஸிட்டி இருவரும் ஆப்பிரிக்காவின் கார்தேஜ் நகரில், பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Emperor
Septimius Severus) என்பவனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின்போது, இராணுவ விளையாட்டு மைதானத்தில் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். இவர்களுடன் கொல்லப்பட்ட அடிமைகளான "ரெவோகட்டஸ்",
"செகுண்டுலஸ்" மற்றும் "சச்சுர்நினஸ்" (Revocatus, Secundulus and Saturninus) ஆகிய மூவரும் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்.
இவர்களின் மரணத்தின் சில நாட்களுக்கு முன்னர் ஃபெலிஸிட்டி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இவர் விதவையர் மற்றும் இறந்த குழந்தைகளின் தாய்மாரின் பாதுகாவலர் ஆவார்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON