சாவியை வைத்து அந்த சிற்பத்தின் அளவை
கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதிகபட்சம் ஒவ்வொரு நடன மாதரும் மூன்று அங்குலம் மட்டுமே
இருப்பர். அந்த மூன்று அங்குலத்தில் அவர்களின் நடன அசைவுகள், அவர்கள்
பயன்படுத்தும் இசைக்கருவிகள், அவர்களின் உடை, சிகை அலங்காரம் என அத்தனையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது!.இதே
கல்லில் வலது ஓரத்தில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் அமைந்துள்ளதை கவனிக்கத் தவற
வேண்டாம். இந்த மொத்த வேலைப்பாட்டில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் அனைத்துமே வீணாகிவிடும்
என்பதால் இதை வடிக்கும் போது உலகமே இந்த பாறையில் தான் இருந்திருக்க வேண்டும் தன்
பெயரைக் கூட பதிக்காத அந்த சிற்பிக்கு. சரியான பார்வையில் அணுகினால் உங்களை
ஆச்சரியப்படுத்த இது போன்ற ஏராளமான அதிசயங்களை நம் கோயில்கள் தனக்குள் புதைத்து
வைத்திருக்கின்றன.
இடம்: புள்ளமங்கை, பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயம்.
1100 வருடங்கள் பழமையானது
இடம்: புள்ளமங்கை, பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயம்.
1100 வருடங்கள் பழமையானது
nice one tamil martial and war arts pathi pathividunga
ReplyDelete