குஜராத்
மாநிலத்தில், ஆச்சரியமூட்டும் உணவு வகைகள், ரேன் ஆப் கட்ச், துடிப்பான
ஆடைகள், மிகுதியான
கலாச்சாரம் என நாம் அடுக்கிக்கொண்டே போக, 'போய்விடாதீர்கள். என்னையும் பார்த்து
செல்லுங்கள்." என டைனோசர்களும் நம்மை வரவேற்கிறது. "என்னது டைனோசரா!
ஓடுங்கள் ஓடுங்கள்! அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கி வருகிறது!!!" என
ஆச்சரியம் கலந்த பய உணர்வினை நீங்கள் அடைய தேவையில்லை. ஆம், நாட்டில்
டைனோசர் படிமங்கள் காணப்படும் சில இடங்களுள் இம்மாநிலமும் ஒன்றே என்பதை நான்
சொல்லி முடித்தப்பின்னர், பார்க்க செல்லும் ஆர்வம் உங்கள் மனதில் பரவசத்தை கண்டிப்பாக
உண்டாக்கும். இந்த இந்திரோடா டைனோசர் மற்றும் படிம பூங்காவானது காந்தி நகரை வீடாக
கொண்டு காணப்படும் உலகிலேயே இரண்டாவது பெரிய டைனோசர் முட்டைகள்
குஞ்சுபொரிப்பகமாக இருக்கிறது. இந்த பூங்காவை இந்தியாவின் புவியியல் ஆய்வு
நிறுவிட, டைனோசர்களுக்கான
அருங்காட்சியகமாக மட்டும் இந்தியாவில் காணப்படும் ஒன்றாகவும் இது இருக்கிறது. FabSubeject குஜராத்தின் சூழியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையால் இது
நடத்தப்பட, இந்த பூங்காவை 'இந்தியாவின் ஜுராசிக் பூங்கா' என்றும்
அழைப்பர். இங்கே காணப்படும் படிமங்கள், கிரெடரியஸ் காலத்தவை என்றும்
தெரியவருகிறது. குஜராத்தின் வனத்துறையினரால், 1970ஆம் ஆண்டு இந்த இடமானது நிறுவப்பட, இன்று...
நாட்டில் காணும் மனிதனால் உருவாக்கப்பட்ட காடுகளுள் இதுவும் ஒன்றாகவும் விளங்க, அனைவரையும்
ஈர்க்கவும் செய்கிறது. டைனோ நிலம்: இந்த பூங்காவானது 428 ஹெக்டர்
நிலப்பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட, இங்கே பல பிரிவுகளும் காணப்படுகிறது.
டைனோசர் மற்றும் படிம பிரிவுகளை கடந்து பாலூட்டிகள், பறவைகளின் வகை, ஊர்வன, பூமி, கடல், தாவரம், மற்றும்
தாவர தோட்டங்கள் போன்ற பிரிவுகளையும் இது கொண்டிருக்கிறது. மேலும் இந்த இடத்தில்
டைனோக்களின் வாழ்க்கை வடிவ சிலையும் காணப்பட, அவை வாழ்ந்த காலத்திலிருந்தே அவை
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இங்கே காணப்படும் முட்டைகளானது வெவ்வேறு அளவு
மற்றும் வடிவத்தில் காணப்பட, வாத்து முட்டைகளை போன்று தொடங்கி பீரங்கி பந்தின் அளவு வரையில்
காணப்படுகிறது. இந்த முட்டைகளின் எடையானது முழுமையாக வளர்ந்த மனிதனை காட்டிலும்
அதிகமாக இருக்க, அது நம்மை 65 மில்லியன் வருடங்கள் பின் நோக்கி அழைத்து செல்கிறது.
டைனோசர்களின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த இடமானது வெகு நேரத்தை செலவிட
உதவும் என்பதே உண்மை. Sballal இங்கே காணப்படுவனவற்றுள் டைனோசர் இனமான டைனோசரஸ் ரெக்ஸ், மெகா
லாசரஸ், டைட்டானோ
சாரஸ், பரா
பாசரஸ், ப்ராச்சியோ
சாரஸ், அண்டார்டோ
சாரஸ், ஸ்டீகோ
சாரஸ், இகுவா
நோடன் ஆகியவையாகும். எங்கே இவை காணப்படுகிறது? சொங்கிர் பாக் படுகை மற்றும்
ஹிமத்நகரின் பாலோசினாரில் இந்த படிமங்கள் காணப்பட, மேலும் கேடாவின்
தெற்குபகுதி, பஞ்ச்மால், மற்றும் வதோதரா மாநிலங்களிலும் இது காணப்படுகிறது. இந்த
படிமங்கள் ஒருபக்கம் இருக்க, மேலும், இங்கே வருவதன் மூலம் விலங்கு மற்றும் பறவைகளான... மான் மற்றும்
மயிலையும் சபர்மதி ஆற்றங்கரையில் நம்மால் பார்க்க முடிகிறது. FabSubeject பார்வையாளர்கள் இங்கே வருவதன் மூலம் முட்டைகளை படம்பிடித்து
பார்த்து அதிசயிக்க, அவர்களுக்கு அதனை தொட அனுமதி தரப்படுவதில்லை. இங்கே நம்
வாழ்க்கையில் இதுவரை கண்டிராத வடிவத்தில் டைனோசர் முட்டைகள் காணப்பட, உலகத்தை
சுற்றி பார்க்கும் ஒரு உன்னத உணர்வினை நம் மனதில் அது தருகிறது. எப்படி நாம்
அடைவது? காந்தி
நகரின் அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாய் சர்தார் வல்லபாய் பட்டேல்
விமான நிலையம் அஹமதாபாத்தில் காணப்பட, காந்தி நகரிலிருந்து 27 கிலோமீட்டர்
தூரத்தில் அது உள்ளது. Rujuta
Shah காந்தி நகரிலிருந்து 27 கிலோமீட்டர்
தொலைவில் அஹமதாபாத் இரயில் நிலையம் காணப்பட, அது தான் அருகில் அமைந்திருக்கும் ஒரு
இரயில் நிலையமும் கூட. இந்த இடமானது சாலையுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்க
குஜராத்தின் உள் மற்றும் வெளி புற நகரங்கள் பலவற்றுடன் இணைந்தும் காணப்படுகிறது.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இந்த பூங்காவை நாம் பார்க்க சிறந்த
மாதங்களாக அமைகிறது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON