Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: முத்தான முத்து பற்றிய முப்பது விஷயங்கள் - About Pearl
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவ...
* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

*
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

*
பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

*
சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

*
மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

*
கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

*
முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

*
கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.
  
* தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

*
முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

*
பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

*
வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

*
பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

*
முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

*
முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.

*
உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.

*
சீனா, ஜப்பான், ஹாங்காய், இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகிறது.

*
சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.

*
சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும் போதுதான் முத்துக்கள் வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.

*
உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன.

*
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளைச் செய்து அணிந்து கொள்கின்றனர்.

*
தற்போது செயற்கையில் சிப்பிகளினுள் திரவத்தைச் செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.

* 12
ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.

*
முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம்.

*
காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்து மாலைகள் வைக்க வேண்டாம்.

*
முத்து மாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தித் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

*
காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.

*
அமிலங்கள், இரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

*
முத்து சிறந்த மருத்துவப் பொருளாகும். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகள் கலந்து பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

*
முத்து இளமையைக் காக்கும். அழகு சாதனங்கள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

*
நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.

18 May 2016

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...