குறைப்பிரசவம் நடக்காது
கருவுற்ற 8-வது மாதத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குறைப்பிரசவம் ஏற்படும் என்ற பயம் தான், பல பெண்களுக்கு தங்கள் ஆசையை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் உங்களுக்கு எந்த ஒரு மருத்துவ பிரச்சனையும் இல்லாத பட்சத்தில், குறைப்பிரசவத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
குழந்தைக்கு தீங்கை ஏற்படுத்தாது
கருவுற்ற 8-வது மாதத்தில் உடலுறவு கொண்டால், அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது கர்ப்பமான பெண்களுக்கு மத்தியில் விளங்கும் பொதுவான நம்பிக்கையாகும். ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் குழந்தை உங்கள் கருப்பையில் பத்திரமாக இருக்கும். சில இயற்கையான தடைகள் உங்கள் குழந்தையை பாதுகாக்கும்.
உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்துடன் இருக்கலாம்
நீங்கள் இருக்கும் மனநிலையின் தாக்கம் உங்கள் குழந்தையின் மன வளர்ச்சியில் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் இருந்தால் உணர்ச்சி ரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சி மிக்க கர்ப்ப காலத்தை அனுபவிப்பீர்கள்.
கணவருடனான பிணைப்பு அதிகரியுங்கள்
வறண்ட இரவை உங்கள் கணவர் விரும்பமாட்டார். உங்கள் மீது இருக்கும் காதல் மற்றும் அக்கறையினால் அவர்களின் ஆசையை அவர்கள் அடக்கி வைத்துக் கொள்வார்கள். கருவுற்ற 8-வது மாதத்தில் உடலுறவு கொள்வதில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்பதால் அவர்களை பட்டினி போட்டு அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க தேவையில்லை.
சந்தோஷமான முடிவே பாதுகாப்பானது
உடலுறவின் இறுதி சுகத்தில், நீங்கள் அனுபவிக்கும் இருக்கங்கள் மிதமானதாக இருப்பதோடு, அது கருப்பையில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்ப்பவாய், பனிக்குடப்பை மற்றும் கருப்பையின் திடமான தசைகளை அடைத்திருக்கும் அடர்த்தியான சீத அடைப்பி போன்றவை கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பை அளிக்கும்.
பாதுகாப்பாக செய்திடுங்கள்
உங்கள் பிரச்சனைகளை உங்கள் கணவனிடம் பேசுங்கள். உங்கள் வயிற்றுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத தோரணையை தேர்ந்தெடுங்கள். மொத்தத்தில் எப்படியிருந்தாலும், காதல் என்பது முழுசாக உடல் சம்பந்தப்பட்டவை கிடையாது. பாத மசாஜ், அணைத்தல் அல்லது முத்தம் போன்ற வடிவத்திலும் சந்தோசத்தை அடையலாம். கருவுற்ற 8-வது மாதத்தில், எப்போது உடலுறவு கொண்டால் பாதுகாப்புடன் இருக்காது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உங்கள் பிரச்சனைகளை பற்றி உங்கள் மருத்துவரிடம் மனம் விட்டு பேசுங்கள். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதை பற்றி முரண்பாடு இருந்தால், எதற்கு வீணான சந்தேகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON