உலகின் பல முக்கிய நகரங்களுக்கு சிலைகள் அடையாளமாகி உள்ளன. அதுபோன்ற அடையாளம் ஒன்றைப் பெற்றிருக்கும் நகரம்தான் ரியோ டி ஜெனிரோ. அந்த நகரத்தின் அடையாளமாக விளங்குவது க்ரைஸ்ட் தி ரிடீமர் (CHRIST THE REDEEMER) என்ற மிகப் பிரபலமான, பிரமாண்டமான ஏசு கிறிஸ்துவின் சிலை.
124 அடி உயரம், கைகள் விரித்த நிலையில் 92 அடி அகலம், சுமார் 1000 டன் எடை என க்ரைஸ்ட் தி ரிடீமர் (CHRIST THE REDEEMER) சிலை பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோ (Rio De Janeiro)-வில் அமைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் (Paris)-சுக்கு ஈஃபிள் டவர் (Eiffel Tower), நியூயார்க்கிற்கு சுதந்திர தேவி சிலை என்ற வரிசையில் பிரேசிலுக்கு க்ரைஸ்ட் தி ரிடீமர் (CHRIST THE REDEEMER) சிலை என அடையாளமாகிவிட்டது.
2300 அடி உயரமுள்ள கார்கோவடோ (Corcovado) மலைகள் மீது பிரம்மாண்டமாக நிற்கிறது ஏசு கிறிஸ்துவின் இந்தச் சிலை. ரியோ டி ஜெனெய்ரோ (Rio De Janeiro) நகரை பார்ப்பதைப் போல் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பிரேசில் நாட்டின் 100ஆவது சுதந்தர தினத்தை குறிக்கும் சின்னமாக விளங்கி வருகிறது. 1922லிருந்து 1931 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணிகள் நடந்தன.
1920ஆம் ஆண்டு மான்யூமண்ட் வீக் (Monument Week) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நன்கொடைகளும், மாதிரி வடிவங்களும் பெறப்பட்டன. இதிலிருந்து இயேசு கிறிஸ்து இரு கைகளை விரித்தபடி, சிலுவையைப் போல காட்சியளிக்கும் அமைதி வடிவம் இந்த சிலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட்து. ஹைடோர் டா சில்வா கோஸ்டா (Heitor Da Silva Costa) என்ற உள்ளூர் பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு, பிரானஸ் நாட்டுச் சிற்பி பால் லேண்டோவ்ஸ்கி (Paul Landowski)-யால் உருவாக்கப்பட்டது. இதற்கு 20 லட்சம் ரியால்கள் அதாவது இன்றைய மதிப்பின்படி 33 லட்சம் டாலர் பணம் தேவைப்பட்டது.
1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சிலை அதிகாரப்பூர்வமாக அப்போதைய அதிபர் கெடிலியோ வர்காஸ் (Getulio Vargas)-ஆல் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் 75-ஆவது ஆண்டு விழாவில் அவர் லேடி ஆஃப் தி அபாரிஷன் (OUR LADY OF THE APPARITION)-னுக்கான தேவாலயம் இந்த சிலையின் கீழ் திறக்கப்பட்டது. 150 பேர் வரை அமரும் வசதி கொண்ட இந்தத் தேவாலயத்தில் கிறிஸ்துவர்களின் பெயர் சூட்டும் நிகழ்ச்சிகளும், திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
2008ஆம் ஆண்டு கடந்த சூறாவளியால் மின்னல் தாக்கி விரல், நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் அந்நாட்டு அரசும், கிறிஸ்துவ சபைகளும் பாதிப்புகளை சீர்படுத்தின. இந்த சிலையை சுற்றி 220 படிகள் ஏறாமல் செல்ல ஏதுவாக மின்தூக்கிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சிலையைச் சேதப்படுத்தினாலோ, அழகைக் குலைக்க முயற்சி செய்தாலோ சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த ஃபிஃபா (FIFA) உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் போது பிரேசில் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அணியின் நிறமான பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர வைக்கப்பட்டது.
இந்த சிலையிலிருந்து ரியோ டி ஜெனெய்ரோ (Rio De Janeiro) நகரம், அட்லாண்டிக் பெருங்கடல், ஷுகர்லோஃப் (Sugarloaf) மலை, கோபாகபானா (Copacabana) மற்றும் ஐபனேமா (Ipanema) கடற்கரைகள் என பலவற்றையும் மேலிருந்து பார்ப்பது ஒரு நிகரற்ற அனுபவம் என இங்கு வருபவர்கள் தெரிவிக்கின்றனர். மக்களை ஏசு கிறிஸ்து இருகரங்கள் கொண்டு தம்மிடம் அழைத்துக்கொள்வதை போல் உள்ள இந்த இடத்திற்குதான் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். 2007ஆம் ஆண்டு உலகின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்ட இந்த சிலை, பிரபலமான திரைப்படங்களிலும் ஆங்கிரி பர்ட்ஸ் (Angry Birds) போன்ற வீடியோ கேம்களிலும் இடம் பெற்றுள்ளது.
நன்றி !!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON