வரலாற்றுச்
சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான
மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது
வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும்
உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால்
இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற
ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில்
கட்டப்பட்டிருக்கலாம்.
மலையிலிருந்து
சங்ககிரி நகரின் தோற்றம்
கோட்டையின்
மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு
நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள்
வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால்
புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த
நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின்
வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6ஆவது
வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது.
கோட்டையின் உச்சியில்
சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில்
இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில்
சோமேஸ்வரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்
துறையினரின் பாதுகாப்பில் உள்ளது
தீரன்
சின்னமலையை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று)
தூக்கிலிட்டார்கள்
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON