Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் (ஏப்ரல் 23) புனிதர் ஜார்ஜ் (St. George of Lydda)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர்  ( ஏப்ரல் 23)  புனிதர் ஜார்ஜ்  St.George of Lydda  மறை சாட்சி : (Martyr) பிறப்பு : கி . பி . 280  லிட்டா , சிரிய...
இன்றைய புனிதர் (ஏப்ரல் 23) புனிதர் ஜார்ஜ் St.George of Lydda 
மறை சாட்சி : (Martyr)
பிறப்பு : கி.பி. 280 லிட்டா, சிரியா ரோம பேரரசு Lydda, Syria Palaestina, Roman Empire
இறப்பு : ஏப்ரல் 23, 303 நிக்கோமீடியா, ரோம பேரரசு Nicomedia, Birthynia, Roman Empire)
முக்கிய திருத்தலங்கள்புனித ஜார்ஜ் தேவாலயம், லிட்டா, இஸ்ரேல் (Church of Saint George, Lydda, Israel) கேரள மாநிலம் எடத்துவா 
சித்தரிக்கப்படும் வகைஓர் படைவீரராக கவச உடை அணிந்துகையில் சிலுவை முனை கொண்ட ஈட்டியை ஏந்திவெண்குதிரையில் அமர்ந்த வண்ணம் பறக்கும் நாகம் அல்லது இறக்கையுள்ள முதலையை (Dragon) கொல்பவராகச் சித்தரிக்கப்படுகிறார்.
மேற்கத்திய சபைகளில் கவசம் அல்லது கேடயம் அல்லது பட்டியில் புனித ஜார்ஜின் சிலுவை காட்டப்பட்டுள்ளது.
பாதுகாவல்உலகின் பல பகுதிகளைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
நினைவுத் திருநாள் : ஏப்ரல் 23

கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் பல புனிதர்கள் உண்டு. புனிதர்கள் என்றால் உடல்,பொருள், ஆவி அனைத்தும் இயேசுவுக்கே கொடுத்து அவருக்காக வாழ்ந்தவர்கள் என பொருள்
அப்படிபட்டவர்கள் ஏராளம் உண்டு எனினும் மிக சிலரே பெரும் அடையாளம் பெற்றனர், அவர்களில் ஒருவர் ஜார்ஜ் இன்றைய இஸ்ரேலின் டெல் அவிவிற்கும் ஜெருசலேமுக்கும் இடையில் உள்ள லைடா அல்லது லோட் எனும் ஊரை சேர்ந்தவர் அவர், அக்காலத்தில் டையோகிளியஸ் எனும் ரோம மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் , 3ம் நூற்றாண்டு காலமது அவன் காலத்தில் கிறிஸ்தவம் பரவியது, ஹிட்லர் யூதருக்கு காட்டிய கொடுமைகளில் கொஞ்சமும் குறைவில்லாதது டையோகிளிசியஸ் கொடுமைகள் அக்காலத்தில் அவனின் சிப்பாயாக பாலஸ்தீன பகுதியில் படையில் இருந்தார் ஜார்ஜ், அப்பொழுது ஒரு பெரிய டிராகன் ஒன்று இருந்திருக்கின்றது, அது இன்றைய சிரிய பக்கம் இருந்தது

ஒரு கிணற்றில் வசித்த டிராகனுக்கு தினமும் ஒரு நபரை கொடுக்க வேண்டுமாம், அன்று அந்த சிற்றரசனின் மகள் முறை. அவளை விடுவிப்பவருக்கு தன் மகளை கொடுப்பதாக அறிவித்தான் மன்னன் இந்த ஜார்ஜ் என்பவர் குதிரை மேல் ஏறி சென்று அந்த டிராகனை கொன்றுவிட்டார், அந்த படம்தான் பல கிறிஸ்தவ வீடுகளில் காணகிடக்கின்றது. பின்பு அந்த அரசன் மகளை மணக்க மறுத்து துறவியாகவே நின்றிருக்கின்றார், அவர் புகழ் பரவியது ஏராளமான அற்புதங்களையும் அதிசயங்களையும் அவர் செய்திருக்கின்றார், கிறிஸ்துவின் பெயரால் செய்து கிறிஸ்துவத்தை வளர்த்திருக்கின்றார் விடுவான டயோகிளிசியஸ்? இரு வாய்ப்புகளை வைத்தான் 

இயேசுவினை மறுதலித்துவிட்டு படைதலைவர் பதவியினை ஏற்றுகொள்வது இன்னொன்று கொடூரமாக சாவது அவர் இரண்டாம் வாய்ப்பினை தேர்ந்தெடுத்தார்
முதலி ஈட்டியால் குத்தி கொன்றார்கள் அவரோ மன்னன் முன்னால் உயிரோடு வந்து நின்றார், இரண்டாம் முறை கொன்று அரைத்து ஈயம் கலந்து புதைத்தார்கள் அவர் எழுந்தார் இன்னொரு முறை மிக கொடூரமாக கொன்று ஒழித்தார்கள், அப்பொழுதும் எழுந்தார் இந்த விஷயங்கள் ரோமில் பெரும் அதிசயத்தினை ஏற்படுத்தின, ரோம பீடமே ஆட்டம் கண்டது

மன்னா உனக்கு கிறிஸ்துவினை போதித்துவிட்டே சாவேன், என் உயிர் நீ என் போதனையினை கேட்டால் தவிர போகாது என அவன் முன் நின்றார் அவனோ சொல்லும், சொல்லி தொலையும் என சொல்லிவிட்டு கேட்டான், அவர் முழுக்க போதித்தார் அவனோ சட்டை செய்யவில்லை பின் அவரின் ஊரில் அவரை கொல்ல உத்தரவிட்டான், அப்படியே இறைவனிடம் தன் ஆவியினை ஒப்படைத்துவிட்டு மரித்தார் ஜார்ஜ்
                   church of saint george and Mosque Lydda Israel
அவரின் கல்லறை இன்றும் இஸ்ரேலின் லைடா அல்லது லோட் நகரில் உண்டு
அவர் இறந்தபின்பும் அற்புதங்கள் தொடங்கின, சிலுவை போர்களில் எல்லாம் அவரின் உதவி கிடைக்க்பெற்றதாக கிறிஸ்தவ குறிப்புகள் உண்டு இஸ்லாமியர் இவரை அல் கோதர் என்ற வகையில் இறைவனின் பலமிக்க மனிதராக இன்றும் போற்றி வருகின்றனர் அரபு இஸ்லாமியருக்கும் இன்றுவரை அவர்மேல் தனி மரியாதை இருக்கின்றது. பன்னெடுங்காலம் இஸ்லாமிய மன்னர்கள் அவரின் கல்லறையினை பாலஸ்தீனத்தில் மிக நல்லமுறையில் பாதுகாத்தார்கள், அவர்கள் கொடுத்த மரியாதை அப்படி
                Tomb of saint george in church and Mosque Lydda Israel
இன்றும் அந்த கல்லறையும் சிறிய ஆலயமும் அப்படியே இருக்கின்றது.
பின்பு திருச்சபை 14 முக்கிய புனிதராக அவரை அறிவித்தது, ஐரோப்பா முழுக்க பின்னாளில் கொண்டாடபட்டார் அவரை நம்புபவர்களுக்கு அவர் எல்லா நலனும் கொடுப்பவராகவே நம்பி மேல்நாட்டு மக்கள் பின் தொடர்ந்தனர், ஏராளமான அதிசயங்களும் நடந்தன‌

இங்கிலாந்து புனித ஜார்ஜ் எங்களின் பாதுகாவலர் என அறிவித்தது அவரை போல் ஏராளமான தேசங்கள் அறிவித்தன‌ ஜார்ஜியா என்றொரு நாடே அவர் பெயரில் உருவானது இந்த ஜார்ஜ் தங்களை வழிநடத்துவதாக பிரிட்டானியர் நம்பினர், இன்றும் அரச குடும்பத்து விழாக்கள் திருமணம் லண்டன் ஜார்ஜ் ஆலயத்திலே நடைபெறும் சென்னையில் கட்டிய கோட்டைக்கு கூட பிரிட்டிஷார் அவர் பெயரையே சூட்டினர் ஜார்ஜை தங்கள் பாதுகாவலராக ஏற்றுகொண்டபின், எந்த போரிலும் தாங்கள் தோற்கவில்லை என்பது பிரிட்டானியரின் நம்பிக்கை 
இன்று அவர் பரலோகம் சென்ற நாளாக அறியபட்டு விழா கொண்டாடபடுகின்றது
                      St. George Forane Church, Edathua Kerala
கேரள மாநிலம் எடத்துவாவில் இருக்கும் புனித ஜார்ஜியார் ஆலயம் வேளாங்கண்ணி போல பிரசித்தி பெற்றது, அங்கு இன்று திருவிழா தொடக்கம் உலகெல்லாம் இருந்து பெரும் கூட்டமாக கலந்துகொள்வார்கள் மலையாள கிறிஸ்தவர்களின் பெரும்பான்மையான பெயர் ஜார்ஜ் என்றிருப்பதன் காரணம் இதுதான், அவர் தங்களின் பாதுகாவலர் என அவர்கள் நம்புகின்றனர் பெரும் அதிசயங்களை செய்யும் புனிதராக அவர் இன்றும் அறியபடுகின்றார், உலகெல்லாம் கிறிஸ்தவர்கள் அவரால் இன்றும் பல நன்மைகளை பெறுவதாக நம்புகின்றார்கள்

உலகெல்லாம் அவருக்கு பெரும் பக்தர் கூட்டம் உண்டு, அவர்களுக்கெல்லாம் அவர்கள் பாதுகாவலரின் திருவிழா வாழ்த்துக்கள்

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top