பாண்டிச்சேரி புரோமெனேட் பீச் பத்திய பதிவுக்காக தகவல்களை திரட்டும்போதுதான் பாண்டிச்சேரி உருவான வரலாற்றை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்கக்கிட்ட பகிரவே இன்றைய பதிவு..., பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பற்றி சில வரலாற்று தகவல்களையும், அது கடந்து வந்த பாதைகளையும், பாண்டிச்சேரியை உருவாக்கிய ருஃ பிரான்சுவா மார்டின் பற்றியும் இன்றைய தென்றலில் பார்க்கலாம்.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி (French: Compagnie française pour
le commerce des Indes orientales). பிரிட்டிஷ் மற்றும் டச்சு கிழக்கு இந்திய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக 1664 ஆம் ஆண்டு வாணிப நோக்கோடு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது Jean-Baptiste Colbert என்பவரின் ஆலோசனைப்படிபதினான்காம் லூயி மன்னரால் பூமியின் கிழக்கு பகுதியில் Compagnie de Chine,the
Compagnie d'Orient and Compagnie de Madagascar என்ற மூன்று கம்பனிகளை ஒருங்கிணைத்து நடத்த 1660 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
பதினான்காம் லூயி
இங்கே பதினான்காம் லூயி மன்னரை பற்றி சொல்லவேண்டும் என்றால் இவர் கடவுளால் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டவர் என்று சொல்லபடுவதுண்டு. இவர் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்னேதான் பிரான்ஸ் மன்னராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் அவர் ஆட்சிப்பொறுப்பு எதிலும் தலையிடவில்லை அரசு நிர்வாகத்தை அவரது விசுவாசமான இத்தாலிய பிரதம மந்திரி ஜூல்ஸ் கார்டினல் மசரின் என்பவர் 1661ல் அவர் இறக்கும் வரை அவரே ஆட்சிபொறுப்பை கவனித்து கொண்டார். அதன்பிறகு தான்லூயிஸ் மன்னர் 1715 ல் தன்னுடைய 77 ம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவரது ஆட்சிகாலம் எழுபத்தி இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் பதினெட்டு நாட்கள். இதுவரை எந்த ஐரோப்பிய மன்னர்களும் பதினான்காம் லூயிஸ் மன்னரைபோல் நீண்டநாள் ஆட்சி செய்ததில்லை. பதிவு பாண்டிச்சேரியிலிருந்து, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போய் அப்படியே பிரெஞ்ச் அரசாட்சிக்கு போனால் அந்த வரலாறு மிகவும் நீண்டதாக இருக்கும். ஆகையால், அதை இத்தோடு நிறுத்திவிட்டு நாம் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பக்கம் வருவோம்.
அந்த சமயத்தில் நடந்த சமகால நிகழ்வுகளும், யுத்தங்களும் வரலாற்றில் மிகமுக்கியமான பங்கு வகித்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சிறப்பாக வணிகம் செய்துவந்தபோர்த்துகீசியர்,,டச்சுக்காரர், டேனியர்ஆகியோர் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வருகையால் வாணிப போட்டியில் வலுவிழந்து இந்தியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறிவிட்டனர். கி.பி.1664-இல் தோற்றுவிக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.1668-இல் சூரத்திலும், 1669-இல் மசூலிப்பட்டணத்திலும் பண்டகசாலைகளை நிறுவியது. அக்காலகட்டத்தில்பீஜப்பூர் சுல்தானின் கீழ், சிற்றரசனாக இருந்த செர்க்கான்லோடிதிருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ஃபிரான்சுவா மார்டின்பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் பாண்டிச்சேரி பண்டக சாலையின் இயக்குனராக பதவியேற்றார்.
பல்வேறு வரலாற்று போராட்டங்களுடன் ஆட்சிமாற்றம் மற்றும் நிர்வாக மாற்றம் போன்றவைகளால் அலைகழிக்கப்பட்ட பாண்டிச்சேரி இறுதியில் ஒரு நகரமாக,] ருஃ பிரான்சுவா மார்டினால் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் டச்சுகாரர்கள் வடிமைத்த பாண்டிச்சேரியில் தெருக்கள் நேராகவும், நேர்த்தியாகவும், ஒரு ஒழுங்கான அமைப்பில் வடிவமைத்திருந்தனர். சுதந்திர காலத்துக்கு முன்புவரை தெருக்கள் எல்லாம் நேராக இருந்ததாகவும் சொல்லபடுகிறது. பண்டையகாலங்களில் பாண்டிச்சேரியை பற்றி குறிப்பிடும்போது வீதி அழகு உண்டு, நீதி அழகு உண்டு என்று பழமொழியாகவே குறிப்பிடுவார்கள். இந்த வரைபடம் செப்டம்பர் 1893 முதல் 1693 முதல் மார்ச் 1699 வரை பாண்டிச்சேரியை நிர்வகித்து வந்த டச்சுகாரர்களின் நகர வரைப்படம்.
ஆனால், சில இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இந்த நகரம் பிரெஞ்ச் கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டபட்டுள்ளது. இருந்தாலும், சில அறிஞர்கள் டச்சுகாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது பிரான்சுவா மார்டின் காலத்திற்கு பிறகு மாறி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். .
தெருக்கள்.எல்லாம் நேராக இருப்பதற்கு டச்சுசுகாரர்கள் வடிவமைத்த நகர "ப்ளு பிரிண்ட்" வரைப்படமே சாட்சி என ஜேன் டிலோச்சி என்ற வரலாற்று ஆசிரியர் Ecole Francaise d”Extreme Orient at
Pondicherry. என்ற குறிப்புகளில் கூறியுள்ளார் .
கி பி 16 ம் நூற்றாண்டுகளில் பாண்டிச்சேரி நெசவு தொழிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதேச்சமயம் துறைமுகமும் கூட அவர்களது வாணிபத்திற்கும், அந்நிய தேசத்து ஏற்றுமதி, இறக்குமதி முகாந்திரமாகவும் இருந்தது.
வாணிபம் சிறந்து விளங்கியதால், பல்வேறு கொள்ளைகூட்டங்களும் அவ்வப்போது மக்களை துன்புறுத்தி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் உள்ள ஆங்கிலேயர்களின் ஆவணங்களில்,1648 ல் பிண்டரியர் என்ற கொள்ளை கூட்டத்தினர், செஞ்சிகோட்டையிலும், பாண்டிச்சேரி துறைமுகத்திலும் கொள்ளையாடிததாக குறிப்பிட்டுள்ளனர். இதெல்லாம் ரூஃ பிரான்சுவா மார்டின் இந்தியாவிற்கு வருகை புரிவதற்கு முன்னமே நடந்து முடிந்திருந்தது. இதிலிருந்து நமக்கு பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களால்தான் சிறப்பு பெற்றது என்றில்லாமல் அதற்கு முன்னமே செல்வசெழிப்பும், வரலாற்று நிகழ்வுகளிலும் தொன்மையான நகரம் என தெரியவருகிறது.
அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்தவர் தான் ரூஃ பிரான்சுவா மார்டின். இவர் ஜைல்ஸ் மார்டின்னுக்கும் பெரோன் கொசலின் என்பருக்கும் மகனாக 1634 ம் ஆண்டு பிரான்சில் பிறந்தார். அந்த சமயத்தில் ஜைல்ஸ் மார்டின் பாரிஸில் வியாபாரம் செய்துவந்தார். 1660 ஆண்டு அவர் இறந்ததும், ரூஃ பிரான்சுவா மார்டின், வேறு ஒரு வணிகரிடம் வேலைக்கு சேர்ந்து அங்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில், துணை வணிக அலுவலராக பதவியேற்று கொண்டார். பிறகு பிரான்ஸின்வடமேற்கு பக்கத்தில் பிரஸ்ட் என்ற இடத்தில இருந்து மடகாஸ்கர் தீவு. இது, ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது. அப்பொழுது அது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. அங்கே வணிப அதிகாரியாக 1665 ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பதவியேற்று கொண்டார் .
மடகாஸ்கரில் மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் அங்கே பதவி உயர்வு பெற்று 1669 ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கரையோரம் உள்ள சூரத் நகருக்கு பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை பெறுக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். சூரத்தில்சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் பின்னர்மசூலிப்பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிறப்பாக பணியாற்றிய ரூஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய பண்டகசாலையின் இயக்குனராகக்கபட்டார்.
Compare "The City of Masulipatam," from Philip
Baldaeus, 'A true and exact description of the most celebrated
East-India Coasts of Malabar and Coromandel," 1672
பழைய ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட படத்தின் தெளிவான வடிவம்
1672 ம் ஆண்டு மசூலிபட்டிணத்தில் இந்த நாகரீக உலகில் கிரேன்களை கொண்டு சரக்குகளை கப்பலில் ஏற்றுவதை போல யானைகள் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளன .
பின்னர் ரூஃ பிரான்சுவா மார்டின் மசூலிப்பட்டிணத்திலிருந்து 1674 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி 60 பிரெஞ்சுக்காரர்களுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார். அப்பொழுது பேரன் என்பவர் பாண்டிச்சேரி பகுதியின் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சூரத்திற்கு தலைமை இயக்குனராக பொறுப்பேற்றதனால், ரூஃ பிரான்சுவா மார்டின் 1675 மே 5 ம் தேதி பாண்டிச்சேரி பண்டகசாலைக்கு இயக்குனராக பொறுபேற்றார்.
அதன்பிறகுதான் வரலாற்றில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் செஞ்சி பகுதியில். மராட்டியருக்கும், மொஹலாயருக்கும் கடுமையான யுத்தங்கள் நடந்து கொண்டு இருந்தன. (அதைபற்றி நம்முடைய செஞ்சி கோட்டை பதிவுகளில் தெளிவாக குறிபிட்டுள்ளேன்). அதில் எந்த பிரிவினருக்கும் ஆதரவு கொடுக்காமல்
ரூஃ பிரான்சுவா மார்டின் நடுநிலைமையாகவே இருந்தார். அந்த சமயத்தில் கடுமையான போர்களின் காரணமாக மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் இளைய மைந்தர் இராஜாராம் கடும் நிதி பற்றாக்குறையில் இருந்தார் ஆகையால் மராட்டியரின் கட்டுபாட்டில் இருந்த பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களிடம் விற்பதற்கு முயன்றார். ஆனால், அவர் கேட்ட தொகையினை பிரஞ்சுகாரர்களால் கொடுக்க முடியாததால் இந்த பேரம் தோல்வியில் முடிந்தது.
இதில் டச்சுக்காரர்களின் சூழ்ச்சியும் அடங்கும். அவர்கள் பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களின் கைக்கு போகாமல் பார்த்துகொண்டனர். இதனால்தான் மன்னர் இராஜாராம் இரண்டாவது முறையும் பண்டிச்சேரியை விற்க வந்தபோது கூட ரூஃ பிரான்சுவா மார்டினால் அதைவாங்க முடியவில்லை. இறுதியாக டச்சுக்காரர்கள் செஞ்சியில் சூழ்ச்சி செய்து மன்னர் இராஜாராமிடம் இருந்து பாண்டிச்சேரியை விலைக்கு வாங்கிவிட்டனர். ஆகையால் பிரெஞ்சுக்காரர்களை காலி செய்வதற்கு மராட்டிய நிலைகளுடன் சேர்ந்து டச்சுக்கார்கள் தாக்க தயாராகினர் . அவர்களுக்கு உதவியாக படேவியம் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்தோனேஷியாவிலிருந்தும், இலங்கைலிருந்தும், நாற்பது டச்சுகப்பல்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு 1693 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்கு வந்தது. அதிலிருந்து சுமார் 20,000 படைகள் கரையிறங்கி வந்து கடுமையாக போரிட்டனர். பிரெஞ்சுப்படையும் அவர்களுக்கு எதிராக ஆறு நாட்கள் போரிட்டது. இறுதியில் டச்சு கூட்டுப்படைகளின் முன்னர் தாக்கு பிடிக்க முடியாமல் சரணடைந்தது. இதுப்பற்றி ஒரு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் தன்னுடைய குறிப்புகளில் இருபது ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாண்டிச்சேரி நகரம் 1693 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஒன்றுமில்லாமல் தரைமட்டம் ஆக்கப்பட்டது என குறிபிட்டுள்ளார்
ரூஃ பிரான்சுவா மார்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறை பிடிக்கப்பட்டனர்.பின்னர அவரும் அவரது குடும்பத்தினரும் படேவியத்திற்கு (இந்தோனேஷியா) நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அவரை படேவியதிலிருந்து வங்கம் செல்ல அனுமதித்தனர். அதனால் அவர் 1694 ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி சந்திரநகருக்கு குடும்பத்துடன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து பாண்டிச்சேரியை அடைவதற்கு முயற்சி செய்தார். அதன்படி 1697ம் ஆண்டு செய்துக்கொண்ட ரைஸ்விக் ஒப்பந்தத்தின்படி பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு திருப்பித்தர வழி வகை செய்யப்பட்டது. ஆனால் டச்சுக்காரர்கள் 1699 ல் தான் பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு விட்டுக்கொடுத்தனர் .
இந்தியாவில் பல்வேறு ஐரோப்பிய அரசாட்சிகளின் ஆதிக்கம் இருந்ததால் 17ம் நூறாண்டு 18ம் நூறாண்டுகளில் ஐரோப்பிய வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட போர்கள் புரட்சிகளினால் அங்கே அரசுமாற்றங்கள் உருவானதுபோல் பாண்டிச்சேரியும், பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தது. 1761 ல் பிரிட்டிஷ்காரர்களின் வசம் வந்த பாண்டிச்சேரி சுமார் 23 வருடம் அவர்களின் கட்டுபாட்டில் இருந்தது. டச்சுக்கார்களும், பிரிட்டிஷ்காரர்களும், மாற்றி மாற்றி பாண்டிச்சேரியை கைப்பற்றினாலும் பிரெஞ்சுக்காரர்களால் நடைமுறைபடுத்தப்பட்ட சட்டங்களை அவர்கள் மாற்றவில்லை என்பது ஒரு சிறப்பு என்று சொல்லலாம். அதன்பிறகு 1816ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்களின் ஒப்பந்தப்படி பாண்டிச்சேரி 293.7 சதுர கிலோமீட்டர். ஆனால், இப்பொழுது பரப்பளவு 492 கிமீ2 (190 சதுர மைல்) இந்த வரலாற்று சம்பவங்களிடையே பயணம் செய்தால் நாம் பிரெஞ்சு கதாநாயகன் ரூஃ பிரான்சுவா மார்டின் வரலாற்றில் இருந்து விலகி சென்றுவிடுவோம் .
1699ம் ஆண்டுக்கு பிறகு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில், வாணிபம் பாதுகாப்பு எல்லாம் வலுப்படுத்தினார். அவருடைய காலத்தில் பாண்டிச்சேரி மிக மிக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதன் பிறகு 1700ம் ஆண்டுவாக்கில் வெள்ளியிலான அரைப்பணம், முழுப்பணம் இரட்டை பணம் போன்ற நாணயங்களை வெளியிட்டார். 1706ம் ஆண்டில் மட்டும் பாண்டிச்சேரியில் 10,000 பொன் வராகன்கள் அச்சிடப்பட்டதாக தகவல்கள் சொல்லுகின்றன. ரூஃ பிரான்சுவா மார்டினின் சேவையை பாராட்டி பிரெஞ்சு அரசு பல விருதுகளை அவருக்கு வழங்கியது.
சூரத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு வாணிபத்தில் போட்டி அதிகமானதாலும் லாபம் அதிகமில்லதாததுனாலும், அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாணிப ஸ்தலமாக பாண்டிச்சேரியை தேர்ந்தெடுத்தனர். அதற்கு முன்னரே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனி மேல்மட்ட அதிகாரிகளின் குழு சூரத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு பாண்டிச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்க தீர்மானித்திருந்தது. அந்த கமிட்டியில் ஃரூ பிரான்சுவா மார்டின் புது தலமையாளராகவும், இந்தோ -பிரஞ்ச் கமிட்டியின் தலைமை இயக்குனாரகவும் பிரஞ்சு அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டார்.
1701 ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி ரூஃ பிரான்சுவா மார்டின் காலத்தில் மிகசிறப்பாக விளங்கியது. அந்த சமயத்தில்தான் அவர் கோழிக்கோட்டில் (அப்பொழுது கள்ளிக்கோட்டை என அது அழைக்கப்பட்டது ). ஒரு பண்டகசாலையை நிறுவினார். 1706ம் ஆண்டு ஆற்காடு நவாப்பாக இருந்த தாவுதுகானிடம் இருந்து, ஒழுகரை, மருகாப்பாக்கம் (இதில் பாக்கம் என்றால் வியாபார ஸ்தலம் என்றும் சொல்லப்படுவதுண்டு). ஒலந்தை, மாக்கமுடையான் பேட்டை, கருவடிக்குப்பம் போன்ற இடங்களை வாங்கி பாண்டிச்சேரியோடு இணைத்தார். அதேப்போல ஐரோப்பியாவின் பிரசித்தி பெற்ற வாபன் துனாய் கோட்டையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில் புனித லூயி கோட்டையை கட்டினார். அதன் திறப்புவிழா 1706 ஆகஸ்ட் 25 ம் தேதி நடந்தது.ரூஃ பிரான்சுவா மார்டின் கலந்துக்கொண்ட கடைசி பொதுவிழா இதுவே ஆகும். அதன்பிறகு பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்சு ஆளுனரான
ரூஃ பிரான்சுவா மார்டின் 1706 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி தனது 72 ம் வயதில் அவர் உருவாக்கிய பாண்டிச்சேரியில் வைத்து மரணமடைந்தார் .
File:Magasins de la Compagnie des Indes à
Pondichéry,பாண்டிச்சேரியில் கிழக்கிந்திய கம்பெனியின் கடைகள்
அதன் பிறகு துலிவியர் தலைமை ஆளுனர் மார்டினுக்கு பிறகு 1706 முதல் 1720 வரையிலும் ஐந்து ஆளுநர்கள் பொறுபேற்று கொண்டனர்.
Pierre
Dulivier, January 1707 – July 1708
Guillaume André d'Hébert, 1708–12
Pierre Dulivier, 1712–17
Guillaume André d'Hébert, 1717–18
Pierre André Prévost de La Prévostière, August 1718 – 11 October 1721
அவர்களில் எவரும் ரூஃ பிரான்சுவா மார்டினை போல் திறமையாக செயல்படவில்லை அதன் பிறகு,
Pierre Christoph Le Noir (Acting), 1721–23
Joseph Beauvollier de Courchant, 1723–26
Pierre Christoph Le Noir, 1726–34
Pierre Benoît Dumas, 1734–41
Joseph François Dupleix, January 14, 1742 – October 15, 1754
Charles Godeheu, Le commissaire (Acting), October 15, 1754–54
Georges Duval de Leyrit, 1754–58
Thomas Arthur, comte de Lally, 1758 – January 16, 1761 இவரது காலம் தான் பிரெஞ்சு கடைசி ஆளுநர் அதன் பிறகு பாண்டிச்சேரி பிரிட்டிஷ்காரர்கள் வசம் சென்றுவிட்டது. அதன்பிறகு, வரலாற்று பக்கங்கள் நிறைய திருத்தி அமைக்கப்பட்டன. அதையெல்லாம் எழுதுவது என்றால் நம்முடைய பக்கங்கள் போறாது. அதனால ரூஃ பிரான்சுவா மார்டினின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பயணத்தோடு இதை நிறைவு செய்கிறேன் .