தமிழக கேரள எல்லையில் செழுமையான
இயற்கை வனப்புடன் அற்புதமானதொரு சுற்றுலாத்தலமாக அமைந்திருக்கிறது தேக்கடி. தேனி
மாவட்டத்தை ஒட்டியிருக்கும் கேரள எல்லை மாவட்டமான இடுக்கியில் இருக்கும் தேக்கடி
கேரளத்தின் மிகவும் அழகான, மனிதர்களால் அதிகம்
மாசுபடாத சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக
திகழ்கிறது. வன உயிரியல் புகைப்படத்துறையில் ஆர்வமோ, இயற்கையை
மனதார ரசிக்க வேண்டும் என்ற ஆசையோ இருந்தால் நீங்கள் தேக்கடிக்கு நிச்சயம் செல்ல
வேண்டும். வாருங்கள், அற்புதமான இந்த இடத்தை பற்றிய மேலும்
பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்
வாருங்கள்.
கேரளாவின் தலைநகரான
திருவனந்தபுரத்தில் இருந்து 257 கி.மீ தொலைவில் தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது தேக்கடி நகரம்.
இங்கே தான் பாதுக்கக்கப்பட்ட புலிகள் மற்றும் யானைகள் சரணாலயத்தை உள்ளடக்கிய 'பெரியார் தேசிய பூங்கா' அமைந்திருக்கிறது.
தேக்கடியில் 777 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் பெரியார்
தேசிய பூங்காவானது இந்தியா முழுக்க உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும்
சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலா அம்சமாக இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில்
அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்காவில் 35 வகையான பாலூட்டிகள், 265 பறவை இனங்கள், 30 வகையான பாம்புகள், 165 வகையான பட்டாம்பூச்சிகள்
போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்தியாவில் வெகுவாக அருகிவரும்
உயிரினங்களில் ஒன்றான புலிகள் இந்த சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில்
வசிக்கின்றன. இங்கே மொத்தம் 24 வங்காள புலிகளும், மிகவும் அரிய உயிரினமான வெள்ளை
புலிகளும் வசிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சரணாலயத்தில் புலிகளை தவிர
மான்கள், காட்டுப்பன்றிகள், சிங்கவால்
குரங்குகள், கீரிகள், காட்டெருமைகள்
போன்ற ஏராளமான விலங்கினங்கள் இருக்கின்றன. இவற்றை பார்வையிடுவதற்கும், புகைப்படம் எடுப்பதுக்குமே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
மேலும் இந்த பெரியார் தேசிய
பூங்காவினுள் இருக்கும் குளத்தில் படகு சவாரி செய்யும் வசதி இருக்கிறது. மோட்டார்
படகுகள் மட்டுமில்லாது பழங்கால முறைப்படி உருவாக்கப்பட மூங்கில் மிதவை படகுகளிலும்
பயணித்து இயற்கையின் பேரழகை ரசித்து மகிழலாம். பழங்காலத்தில் மனிதன் மூங்கில் மிதவை
படகுகளை கொண்டு பயணித்த அனுபவத்தை பெற்றிட நீங்களும் பெரியார் தேசிய பூங்காவினுள்
உள்ள ஏரியில் மூங்கில் படகில் பயணித்திடுங்கள்.
இந்த வனவிலங்கு சரணாலயத்தை வித்தியாசமாக
சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் யானையின் மீது அமர்ந்து ஒய்யாரமாக
சுற்றிவரலாம்.
தேக்கடி செல்பவர்கள் தவறாமல்
செல்லவேண்டிய ஓரிடம் 'முத்ரா கலாச்சார மையம்'
ஆகும். இந்த மையத்தில் கேரளத்தின் பாரம்பரிய நடமான கதக்களியை கண்டு
ரசிக்கலாம்.
கதகளியோடு நின்றுவிடாமல் கேரளத்தின்
பாரம்பரிய தற்காப்புக் கலையான கலரி பயட்டும் இந்த மையத்தில் உள்ள கலைஞர்களால்
நிகழ்த்தப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் சைக்கிள் பிரியராக
இருந்தால் பசுமை போர்வை போர்த்தப்பட்டது போன்றுள்ள தேக்கடியை சைக்கிளில்
சுற்றிப்பார்க்கவும் மறந்துவிடாதீர்கள்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON