Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குருசடை தீவு - சுற்றுலா,
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
குருசடை தீவு 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுக...

குருசடை தீவு
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டயர் முதல் 125 ஹெக்டயர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன.
அதில் ஒன்று குருசடை தீவு. இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள ஓர் அழகிய தீவு.இத்தீவைச்சுற்றி பவளப்பாறைகளும், டால்பின் போன்ற அரியவகை மீன்களும், கடல் பசுக்களும் உள்ளன.
குருசடை தீவு ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.
இந்த தீவின் மற்றுமொரு சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும்.
வெளிநாட்டினரும் இங்கு வந்து தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சிறப்பு இத்தீவிற்க்கு உள்ளது.            
நன்றி !!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top