Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? - atta halwa
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கோதுமை அல்வா உங்களுக்கு அல்வா பிடிக்குமா ? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா ? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்க...
கோதுமை அல்வா
உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள்.

இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது)

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும்.

மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!


01 Nov 2015

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...