Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ரோஜாவின் மருத்துவ குணங்கள் - Rose
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இத...

அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்
.   

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top