-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆ) தனித் தேங்காய்ச் சட்டினி - காய்ந்த மிளகாயுடன் பச்சை மிளகாய் போட்டுச் செய்யும் தேங்காய்ச் சட்டினியைப் பொன்ற அதே செய்முறைதான். ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், மிளகாய் வற்றலை முதலில் சிறிது எண்ணெய்யில் வறுத்துக்கொண்டு பின்னர் தேங்கயுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இ) உடைத்தகடலை (பொட்டுக்கடலை) -தேங்காய்ச் சட்டினி தேவைப்படும் பொருள்கள்: நன்கு முற்றிய தேங்காயின் துருவல் - 1 கிண்ணம் உடைத்த கடலை - 1 கிண்ணம் பச்சை மிளகாய் அல்லது வற்றல் மிளகாய்- 10 (அல்லது தேவைப்படி) கடுகு - முக்கால் தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 4 ஆர்க்குகள் பெருங்காயப்பொடி அல்லது கரைசல் - ஒன்றரை அல்லது 2 தே. க. தாளிக் எண்ணெய் - சிறிதளவு உடைத்த கடலையைச் சிறிது எண்ணெய்யில் சற்றே வறுத்துக்கொள்ளவும். அப்போதுதான் அதன் பச்சை வாசனை போகும். (அதைத் தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிட்டு வறுப்பது இன்னும் நல்லது. ஏனெனில், உடைத்த கடலையில் - அது நாள்பட்டதாயின், ஒரு மக்கல் வாசனை வரும். களைந்தால் அது போய் விடும்.)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னம் கூறிய சட்டினிகளைப் போன்றே இதையும் அரைக்கவும். (ஈ) கடலைப்பருப்பு-தேங்காய்ச் சட்டினி தேவைப்படும் பொருள்களும் முன்ன்ம் சொன்ன அதே அளவுகளின் படியே. ஆனால், கடலைப் பருப்பு, உடைத்த கடலையைக் காட்டிலும் திடமானதால் மேலும் ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களையோ அல்லது மிளகாய் வற்றல்களையோ அத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும். புளி அல்லது அலுமிச்சம்பழச் சாறு சேர்ப்பதெல்லாமும் கூட முன் சொன்ன சட்டினிகளைப் போலவே தான். எனினும் கடலைப் பருப்பு-தேங்காய்ச் சட்டினி பிற சட்டினிகளைக் காட்டிலும் சற்றே அதிக நேரத்துக்குக் கெடாமல் இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(உ) மாங்காய்ச் சட்டினி தேவைப்படுபவை: தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம் மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10 பெருங்காயப் பொடி - 1 தே. க. உப்பு - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.