ஒரு பெண்ணின் தந்தை அவள் வாழ்க்கையில்
முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ்
பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. ஒரு தாயை போல்
தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார்.
பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண்
குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன. அவளுடைய
பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து
முடிப்பர் தந்தை.
அதுமட்டுமின்றி தனது மகளின் வாழ்வில்
ஒரு தந்தையானவர் செல்வாக்கையும், சுய மரியாதையையும், நம்பிக்கையையும் கொடுக்கின்றார்.
இப்போது ஆரோக்கியமான அப்பா-மகள் உறவை பராமரிப்பது எப்படி என்று இங்கு காண்போம்.
நல்ல நண்பனாக இருங்கள் மகளை தோழியாக
கருதி, உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக
மகளுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து கேளுங்கள்.
உங்கள் மகளை உங்களுக்கு சமமாக
நடத்துங்கள் உங்கள் மகளுக்கு எதுவும் தெரியாது என்று எண்ண வேண்டாம். குழந்தைகள்
இந்த நாட்களில் மிகவும் தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்திக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்து
கொள்ளுங்கள்.
ஒரு நடுவராக இருங்கள் உங்கள்
மகளுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையில்
வரும் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். இரண்டு பெண்களின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு
ஆண் இருந்தால், பிரச்சனை தீர வாய்ப்பு உண்டு.
பேச கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள்
நன்றாக பேச அல்லது உணர்ச்சியை காட்ட முடியாத நபராக இருந்தால், குழந்தைகளுக்கு சில சில உதவிகளை செய்ய பழகுங்கள்.
அதாவது ஷாப்பிங் அழைத்துச் செல்வது, வீட்டு பாடத்தில்
உதவுவது போன்ற உதவிகளை செய்யுங்கள்.
மகளை நம்புங்கள் பெண்களை
பாதுகாக்கின்றோம் என்று கருதி தந்தைமார்கள் சில நேரங்களில் தொந்தரவு கொடுப்பது
உண்டு. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது சந்தேகம் கொள்ள தூண்டும். இது
கண்டிப்பாக உங்கள் மகளை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறந்து
விடாதீர்கள்.
தனியாக செயல்பட விடுங்கள் அவர்கள் இனி
குழந்தைகள் இல்லை, அவர்களால்
சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும் செய்யும்
தவறுகளில் இருந்து கற்று கொள்ளட்டும். எப்பொழுதும் அவர்கள் பின்னால் நின்று போதனை
செய்வதை நிறுத்துங்கள்.
நிபந்தனையின்றி அவர்களிடம் அன்பு
செலுத்துங்கள் அவள் உங்கள் சொந்த மகள். அவள் சிறந்தவளோ தோல்வியுற்றவளோ உங்கள் மகள்
தான். அதிலும் அவள் மீது உங்கள் கனவை செலுத்தாமல் அவளை அவளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்களது நண்பர்களை ஏற்றுக்
கொள்ளுங்கள் உங்கள் மகளின் சமூக வட்டம் கஷ்டமாக கூட இருக்கலாம். அவளின்
நண்பர்களின் வட்டம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களை ஏற்று
கொள்ளுங்கள்.
பொறுமையாக இருங்கள் இளம் வயது
என்பதால் சில நேரத்தில் அவர்கள் கத்துவார்கள் கோபப்படுவார்கள். இருந்தாலும்
நீங்கள் அமைதியாக இருந்து, அவர்கள் குறைகளை
போக்கி, பொறுமையாக எடுத்து கூறுங்கள்.
ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள் நேரம்
மிக பெரிய பிணைப்பை உண்டாக்கும். உங்கள் நேரத்தை, உங்கள் மகளுடன் செலவிடுங்கள். இதனால் அவர்கள் உங்களை உங்களாகவே ஏற்று
கொள்வார்கள் மற்றும் அன்பு செலுத்துவார்கள் என்பதில் ஐய்யம் இல்லை.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON