Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: அந்தமான் சிறைச்சாலை andaman cellular jail
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடுகடத்தியதாகும் . நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்த...

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடுகடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். சிப்பாய்க்கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர். வனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள். பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

எஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த காசிம்என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.
இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது.


சிறை வடிவமைப்பு
சிற்றறைச் சிறையின் பக்கப்பகுதி சிறைகளின் நடுவில் கோபுரம் அமைந்துள்ளக் காட்சி.
இதன் கட்டுமானம் 1896 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1906 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. இக்கட்டடம் ஏழு பக்கப்பகுதிகாளாகப் பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் அபாய மணியும் வைக்கப்பட்டது.


இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது. ஏழு பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்டாதாக படுக்கைகளற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் 4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம் கொண்டதாக இருந்த்து. 3 மீட்டர் உயரம் கொண்டாதாக இருந்தது. ஒற்றையான ம்ற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிற்றறைச் சிறை (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.


இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
வகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர்.
இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.

Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top