Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உலகின் மிகப்பெரிய அரண்மனை 'உமைத் பவான் பேலஸ்' umaid-bhawan-palace-the-largest-private-residency
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
  ராஜஸ்தான் , இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்று புகழாரம் சூட்டப்படும் நகரம் . கலை , கலாச்சாரம் , உணவு மற்றும் தங்களின் வீரம் ...
 

ராஜஸ்தான், இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்று புகழாரம் சூட்டப்படும் நகரம். கலை, கலாச்சாரம், உணவு மற்றும் தங்களின் வீரம் சேய்ந்த வரலாறு என எதையுமே மறந்துவிடாத மக்களை கொண்டிருக்கும் அருமையான நகரம் இது. தகிக்கும் பாலைவனத்தின் நடுவே அமைந்திருந்தாலும் இந்தியாவில் வேறு எந்த நகரத்தில் இருப்பதை விடவும் அதிக அளவிலான கோட்டைகளையும், அரண்மனைகளையும் கொண்டிருக்கிறது. இன்று ராஜஸ்தானில் இருக்கும் பெரும்பாலான அரண்மனைகளில் ராஜ குடும்பத்தினர் வசிப்பதில்லை. அவை ஆடம்பர தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு உலகெங்கிலும் இருந்து ராஜஸ்தானுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ராஜ வாழ்கையின் அனுவத்தை தருகின்றன. ராஜஸ்தானில் இருக்கும் அதுபோன்றதொரு அரண்மனைதான் 'உமைத் பவான் பேலஸ்' ஆகும். உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றான இதைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள் 
ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் 'மார்வார்ராஜ்யத்தின் தலைநகரமாகவும் விளங்கிய ஜோத்பூர் நகரில் அமைத்திருக்கிறது இந்த உமைத் பவான் அரண்மனை


 ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் 'மார்வார்' ராஜ்யத்தின் தலைநகரமாகவும் விளங்கிய ஜோத்பூர் நகரில் அமைத்திருக்கிறது இந்த உமைத் பவான் அரண்மனை. ஜோத்புரின் மகாராஜாவாக இருந்த உமைத் சிங் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.
இந்த அரண்மனை முழுவதுமே ஜோத்பூரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் 'சித்தார்' என்ற மஞ்சள் நிற பாலைவன கல்லினால் கட்டப்பட்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை 'சித்தார் அரண்மனை' என்ற பெயராலும் அழைக்கின்றனர்இந்த அரண்மனையின் கட்டுமான பணிகள் 1929ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி துவங்கப்பட்டு கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1943ஆம் ஆண்டு தான் இந்த அரண்மனை கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பத்து வருடங்களுக்கு மேலாக இந்த கட்டிட பணி நடைபெற்றதன் பின்னணியில் மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று சொல்லப்படுகிறது.              Umaid Singh

இந்த அரண்மனை கட்டப்பட்டதன் நோக்கமே கடுமையான பஞ்சத்தில் தவித்துவந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்ற அரசரின் முடிவுதான் என்று சொல்லப்படுகிறது. வறட்சியின் காரணமாக பசி மற்றும் பஞ்சத்தில் தவித்து வந்த மக்களை இந்த அரண்மனை கட்டுமான பணிகளில் ஈடுபடுமாறு செய்து அவர்களுக்கு அரசர் பொருளுதவி செய்தார் என்று சொல்லப்படுகிறது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் நீண்ட இந்த அரண்மனையின் கட்டுமான பணிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் மூலம் கிடைத்த வருவாயில் தான் பஞ்சத்தின் கோர பிடியில் இருந்து அவர்கள் தப்பித்திருக்கின்றனர்.


இந்த உமைத் பவான் அரண்மனை இப்போது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி 1972 ஆம் ஆண்டு முதல் 'தாஜ்' குழுமத்தினால் ஆடம்பர தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது.


அதை தவிர மற்ற ஒரு பகுதியில் ஜோத்பூர் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பழங்காலத்தின் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கார்கள் போன்றவை கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் செயல்பட்டு வருகிறது.


அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.


ராஜஸ்தானின் கலை மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாக இந்த அரண்மனை சொல்லப்படுகிறது. ராஜஸ்தானுக்கு வருபவர்கள் நிச்சயம் ஒருமுறையேனும் இந்த அரண்மனைக்கும் வர வேண்டும்.


ஜோத்பூர் நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ராஜஸ்தான் மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இவை தவிர தனியார் சொகுசு பேருந்துகள் ஜெய்பூர், டெல்லி, ஜெய்சல்மேர், பிக்கானேர், ஆக்ரா, அஹமதாபாத், அஜ்மேர், மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களிலிருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.


முன்பே சொன்னது போல இந்த அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் குழுமத்தினால் ஆடம்பர விடுதியாக பராமரிக்கப்படுகிறது. ஒரு நாள் தங்கவே சில பத்தாயிரங்கள் செலவிட வேண்டியிருக்கும் இந்த விடுதியில் அறைகளை முன்பதிவு செய்ய இங்கே கிளிக்குங்கள்.
உமைத் பவான் அரண்மனை அமைந்திருக்கும் ஜோத்பூர் நகரமும் ராஜஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றே. இந்த ஜோத்பூர் நகரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை
இங்கே அறிந்திடுங்கள்.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top