பொதுவாகவே மனித உடல் என்பது இன்றளவும் முழுமையாக கண்டறியப்படாத ஓர் ரகசிய பெட்டகம் தான். அனைவரின் உடல் அமைப்பும், உடல்திறனும், மரபணு கட்டமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. நடை, பாவனை மட்டுமின்றி, உடல் திறனும் கூட ஒவ்வொருவர் மத்தியிலும் மரபணு சார்ந்த நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன.
என்னதான் குறைவாக உண்டாலும் சிலருக்கு உடல்பருமன் அதிகரிக்கும், எவ்வளவு அதிகமாக உண்டாலும் சிலருக்கு உடல் எடை அதிகரிக்காது. இதற்கு காரணம் மரபணு தான். இது போல பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இடுப்பின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு சிறிய வட்டங்கள். இந்த சிறிய வட்டங்கள் இருந்தால் நீங்க ரொம்ப ஸ்பெஷலான நபர். அது எப்படி,
எதனால் என்பதை இனிக் காணலாம்..
அப்போலோ ஹோல்ஸ்
இவ்வாறு இடுப்பின் பின் புறத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இருக்கும் சிறிய இரண்டு வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என குறிப்பிடுகிறார்கள்.
மரபணு
இந்த இரண்டு வட்டங்களும் இடுப்பை இணைக்கும் இரண்டு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருப்பது ஆகும். இது அனைவரிடமும் பொதுவாக இருப்பது கிடையாது. இந்த சிறிய வட்டங்கள் தோன்றுவதற்கு மரபணு சார்புடைமைக்கும் தொடர்பிருக்கிறது.
இரத்த ஓட்டம்
இந்த சிறிய வட்டங்கள் நல்ல உடல் நலத்தையும், இரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது. நல்ல இரத்த ஓட்டம் என்பது தாம்பத்தியத்தை சிறக்க வைக்க முக்கியமாக தேவைப்படுவதாகும்.
உருவாக்கம்
வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் இடத்தில் எந்த தசைகளும் இல்லை. எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் இதை உருவாக்க முடியாது.
கொழுப்பு
ஆனால், இயற்கையாகவே வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் ஓர் நபரின் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது இந்த வீனஸ் ஹோல்ஸ் மறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இடுப்பின் வலிமை
இந்த வீனஸ் ஹோல்ஸ் இயற்கையாகவே இடுப்பின் வலிமை அதிகரித்து உள்ளதை வெளிக்காட்டுகிறது. எனவே, இது இருக்கும் நபர்கள் மத்தியில் உடலுறவு வாழ்க்கை சிறந்தே விளங்கும். ஆனால், உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் திறன்பாடு குறைய வாய்ப்புகள் உண்டு.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON