Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † ( மார்ச் 30 ) ✠ புனித கசோரியா நகர் லூடோவிகோ ✠ ( St. Ludovico of Casoria )
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
† இன்றைய புனிதர் † ( மார்ச் 30 ) ✠ புனித கசோரியா நகர் லூடோவிகோ ✠ ( St. Ludovico of Casoria ) சபை நிறுவனர் : பிறப்பு :...
இன்றைய புனிதர்
( மார்ச் 30 )


புனித கசோரியா நகர் லூடோவிகோ
( St. Ludovico of Casoria )

சபை நிறுவனர் :

பிறப்பு : 11 மார்ச் 1814 
நேப்பிள்ஸ், இத்தாலி அரசு (Naples, Kingdom of Italy)

இறப்பு : 30 மார்ச் 1885 
நேப்பிள்ஸ், இத்தாலி அரசு (Naples, Kingdom of Italy)

அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

புனிதர் பட்டம் : 23 நவம்பர் 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்

பாதுகாவல் : கசோரியா (Casoria)

நினைவுத் திருநாள் : மார்ச் 30

புனித லூடோவிகோ'வின் இயற்பெயர் 'அர்காஞ்சேலோ பல்மென்ட்டியேரி' (Arcangelo Palmentieri) ஆகும். இவர் தச்சுப் பணியில் பயிற்சி பெற்றவர். 

1
ஜூலை 1832ல், 'லூடோவிகோ' என்ற பெயரை ஏற்றவாறு 'ஃபிரான்சிஸ்கன்' இளம் துறவிகள் மடத்தில் இணைந்தார். குருத்துவ அருட்பொழிவு பெற்ற சிறிது காலத்திலேயே 'நேப்பிள்ஸ்' நகரிலுள்ள புனித பேதுருவின் 'ஃபிரான்சிஸ்கன்' துறவு மடத்தின் இளம் துறவிகளுக்கு கணிதம் மற்றும் தத்துவ இயல் கற்பிக்க நியமிக்கப்பட்டார்.

மருந்தகங்களையும் அநாதை இல்லங்களையும் உருவாக்குவதில் விரைந்து செயல்பட்டார். 1852ல், அடிமைத்தளையிலிருந்து மீட்கப்பட்ட இளம் ஆபிரிக்க சிறுவர் சிறுமிகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார்.

இவர் ஏழைகளையும் வயது முதிர்ந்தோரையும் நோயாளிகளையும் தன் இதயத்தில் தாங்கி பராமரித்தார். எண்ணிலடங்கா மருத்துவமனைகளையும் வயோதிகர் இல்லங்களையும் சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கென இல்லங்களையும் பள்ளிக்கூடங்களையும் கட்டினார். காதுகேளாதோர் மற்றும் பேசும் திறன் இல்லாதோருக்கும் பள்ளிகளை நிறுவினார். அவர்களை பராமரிப்பதற்கென இல்லங்களையும் கட்டினார்.

1859
ல், இவர் ஆண்களுக்கான பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கும் சபை ஒன்றினை துவக்கினார். அது, (Gray Friars of Charity) என்று அறியப்பட்டது. மூன்று வருடங்களின் பிறகு, பெண்களுக்கான துறவு மடம் ஒன்றினையும் துவக்கினார். அது, (Franciscan Sisters of Saint Elizabeth) எனும் பெயரில் அறியப்பட்டது.

1876
ல், லூடோவிகோ தீராத பெரும் நோயொன்றால் பாதிக்கப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் அவர் இறந்தார். 

செபம் :
நம்பினோர்க்கு மனத்திடன் அளிக்கும் ஆண்டவரே! 
துறவி லூடோவிகோவின் வேண்டுதல்களுக்கு நீர் கனிவாய் செவிசாய்த்தீர். அவரின் வழியாக பல ஏழைகளை பயனடைய செய்தீர். விடுதலையற்றவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்தீர். அவர் செய்த செயல்கள் அனைத்திலும் நலன்களின் பிறப்பிடத்தை மற்றவர்கள் பெறச் செய்தீர். அவர் ஏற்படுத்திய அனைத்து நிறுவனங்கள், சபைகள் அனைத்தையும் நீர் பராமரித்து வழிநடத்தும். அச்சபையில் வாழும் ஒவ்வொருவரும், அவர்களின் பணிவிடைகளைப் பெறும் அனைவரும் சொல்லாலும் செயலாலும் உமக்குகந்தவர்களாக வாழ செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top