† இன்றைய புனிதர் †
( மார்ச் 26 )
( மார்ச் 26 )
✠ புனித லியூட்கர் ✠
( St. Ludger )
( St. Ludger )
'முன்ஸ்டேர்' நகர முதலாம் ஆயர் :
(First Bishop of Münster)
'சக்சனி' நகர் அப்போஸ்தலர்
(Apostle of Saxony)
(First Bishop of Münster)
'சக்சனி' நகர் அப்போஸ்தலர்
(Apostle of Saxony)
பிறப்பு : கி.
பி. 742
சூய்லேன், நெதர்லாந்து
(Zuilen, Netherlands)
சூய்லேன், நெதர்லாந்து
(Zuilen, Netherlands)
இறப்பு : 26 மார்ச் 809
பில்லர்பெக் (Billerbeck), ஜெர்மனி
பில்லர்பெக் (Billerbeck), ஜெர்மனி
நினைவுத் திருநாள் : மார்ச் 26
பாதுகாவல் : முன்ஸ்டர்
(Münster)
மற்றும் எஸ்ஸன் (Essen)
மறைமாவட்டத்தின் 2ஆம் பாதுகாவலர்.
புனித லியூட்கரின் பெற்றோர், தியாட்க்ரிம் மற்றும் லியாஃபூர்க் (Thiadgrim
and Liafburg) வசதி படைத்த ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
புனித லியூட்கர், 777ஆம் ஆண்டு கொலோனில் குருப்பட்டம் பெற்றார். பிறகு சாக்சன் சென்று மறைப் பணியாற்றினார். தான் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முன்ஸ்டரில் பேராலயம் ஒன்றை கட்டினார். அத்துடன் சில ஆலயங்களையும் எழுப்பினார். ஏறக்குறைய 40 அருட் தந்தையர்களைக் கொண்டு, பல துறவற மடங்களையும் கட்டினார். 40 பங்குகளையும் உருவாக்கினார். சில பெனடிக்ட்டீனர் துறவற மடங்களையும் கட்டினார்.
இவர் ஒருமுறை திருப்பலியில் மறையுரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்தார். இவர் பல துறவற இல்லங்களில் ஆன்ம குருவாக பணியாற்றினார். இன்றும் முன்ஸ்டர் மறைமாவட்டத்தில் இவருக்கென்று தனி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
செபம்
:
ஆண்டவராகிய நானே உங்களின் இதயச் சிந்தனைகளை அறிபவர் என்று மொழிந்த இறைவா! நாங்கள் அன்பின் ஆர்வத்தால் தூண்டபட்டு எப்பொழுதும் அனைத்திற்கும் மேலாக உம்மையும் உம் பொருட்டு எம் சகோதர சகோதரிகளையும் அன்பு செய்ய வரம் தாரும். ஆயர் லியூட்கர் எழுப்பிய உம் இல்லங்களுக்கு வந்து உம்மை தரிசிக்கும் அனைவருக்கும் ஆறுதலையும் அன்பையும் பொழிந்தருளும். உம் இல்லத்திற்கு நாங்கள் வரும் போது உமது சாட்சிகளாக மாறிட வரம் தாரும். முழு மனதுடன் உம்மை போற்றி புகழ்ந்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென் †

Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON