தொலைதொடர்பு
வளர்ச்சியடைந்ததில் இருந்து எமது ஸ்மார்ட் போன்களுக்கு நாள் தோறும் புதுப்புது
வசதிகள் கிடைத்த வண்ணம் உள்ளது. முன்னர் நாம் ஏதேனும் ஒரு போட்டோவை எம்முடைய
உறவினர் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் மின்னஞ்சலையே உபயோகித்து வந்தோம்.
ஆனால் அந்த நிலை மாறி, இப்போது அனைத்துமே வாட்ஸ்அப், வைபர் என்று ஆகி விட்டது.
ஸ்மார்ட் போனில்
இருக்கும் கேமரா மூலம் போட்டோவை எடுத்து மறு நொடியே வாட்ஸ்அப்-ல் எமது
அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் காலமாக மாறி விட்டது இந்த நவீன
தொழிநுட்ப உலகம்.
ஆகவே இன்றைய பதிவில்
வாட்ஸ்அப் உடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். பொதுவாக ஸ்மார்ட் போன்
ஒன்றை வைத்து இருக்கும் அனைவரும் வாட்ஸ்அப் செயலியை நிறுவிக்கொள்ள மறப்பதில்லை.
அந்த அளவுக்கு வாட்ஸ்அப் ஆனது இன்றைய ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில்
முக்கியமான ஒரு செயலியாக கருதப்படுகிறது.
பொதுவாக நாம் வாட்ஸ்அப்
மூலம் எமது போட்டோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆகவே நாம் போட்டோ
ஒன்றை எம்முடைய நண்பர் ஒருவருக்கு அனுப்பியதும், குறிப்பிட்ட போட்டோ ஆனது
நண்பருடைய வாட்ஸ்அப்-ல் தரவிறக்கப்பட முன், போட்டோவினது தோற்றமானது மங்கலாக
காட்டபடும்.
இவ்வாறு மங்கலாக
காட்டப்படும் போட்டோ மூலம் ஒரு சிறிய கண்கட்டி வித்தையை செய்ய முடியும். அதாவது
நீங்கள் அனுப்பிய போட்டோ உங்களுடைய நண்பரின் வாட்ஸ்அப்-ல் தரவிறக்கப்பட முன் ஒரு
தோற்றமும், தரவிறக்கப்பட்ட பின் வேறொரு தோற்றத்தையும் காட்டும் படி செய்யலாம்.
இந்த வேலையை மிக
இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழே வழங்கப்பட்டிருக்கும்
இந்த செயலிகளை
பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஒரு போட்டோவை இன்னொரு போட்டோக்குள் மறைத்து
உருவாக்கி கொள்ள முடியும்.
உங்களது போனுக்கான
குறிப்பிட்ட செயலியை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
பின்னர் இந்த செயலியை
ஆரம்பித்து அதிலே காணப்படும் Original Photo மற்றும் Preview Photo என்ற வசதிகளை
பயன்படுத்தி உங்களது தேவைக்கு ஏற்ற போல போடோகளை உருவாக்கி கொள்ள முடியும்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON