வெந்நீர் குளியல் மாதவிலக்கு
பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது. வயது
வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்
மாதவிலக்கு பிரச்சனை!
அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று
நாட்களின் போது இடுப்பும், வயிறும் அப்படியே
விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி
நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து
வேறு பல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.
இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல
பிரச்சனைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள்
வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு
எலும்புக்கட்டு வலி, ஏன்…
உடலுறவு தொடர்பான சில குறைகளை
நீக்குவது என்று பல பிரச்சனைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!
இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில்
இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து,
நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!
இயற்கை மருத்துவம் செய்யும் பல
டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள். ‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப்
உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம்.
இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய
பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். இடுப்புக் குளியலை குளிர்ந்த
நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக்
கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட்
கிடைக்கும்.
பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது.
முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்… இடுப்புக் குளியலில்
எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்! உங்களுடைய தலையும் பாதமும்
மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக்
டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்.
உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு,
அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக்
கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு
வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக்
கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக்
கொள்ளுங்கள்.
பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப்
பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட
வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால்,
அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.
இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப்
பகுதி மட்டுமல்ல… பிறப்புறுப்பின்
பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து
விடுங்கள். இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர்,
மலச்சிக்கல், போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல
தீர்வைக் கொடுக்கும்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON