Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கூச்ச சுபாவமுடையவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள்!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கூச்ச சுபாவமுடையவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள் இந்த உலகமெங்கும் பரவியிருப்பது இயல்பான ஒன்று தான். எப்போதுமே இவர்கள் உர்ர்ர்ரென்றோ , வெட...

கூச்ச சுபாவமுடையவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள் இந்த உலகமெங்கும் பரவியிருப்பது இயல்பான ஒன்று தான். எப்போதுமே இவர்கள் உர்ர்ர்ரென்றோ, வெட்கப்பட்டுக் கொண்டோ, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டோ, அல்லது ஒருவருடனும் பழகாமலோ தான் இருப்பார்கள் என நினைப்பவர்கள் பலர். இவர்கள் பார்ட்டிக்களை வெறுப்பவர்கள் என்றும், பொதுவாக இவர்களுக்கு மக்களையே பிடிக்காது என்றும் கூட சொல்வார்கள்.

இங்கு இவர்களைப் பற்றிய கட்டுக் கதைகளில் சில பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இவர்கள் வெட்கப்படுபவர்கள்
கூச்ச சுபாவமுடையவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையில் வெட்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், வெட்கப்படுபவர்கள்தான் கூட்டமாக இருப்பவர்களைப் பார்த்து பயந்து ஒதுங்கி இருப்பார்கள். கூச்சமுடையவர்களோ யாருக்கும் பயப்படுவதில்லை. தாம் விரும்புவதை தனியாகவோ அல்லது பலர் முன்னிலையிலோ தைரியமாகச் செய்வார்கள்.

இவர்கள் கரடுமுரடானவர்கள்
அதேபோல், கூச்ச சுபாவமுடையவர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே நடந்து கொள்வதாகக் கூறுவதுண்டு. அது தவறு. இவர்கள் எதையுமே வளவளவென்று பேசாமல் நேரடியாகவே, அதே நேரத்தில் ஆணி அடித்தாற்போல் பட்பட்டென்று பேசிவிடுவார்கள். இவர்கள் அனாவசியமாக யாரையும் காயப்படுத்திப் பேச விரும்புவதில்லை. அனைவருடனும் சுமூகமாக இருப்பதையே விரும்புவர்.

இவர்கள் பேச விரும்புவதில்லை
கூச்ச சுபாவமுடையவர்கள் வாய் திறந்து பேசுவதையே விரும்பமாட்டார்கள் என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. இவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். அப்புறம் இவர்கள் பேசும் பேச்சில் நாம்தான் வாய் பிளந்து நிற்போம்.
இவர்களுக்கு ஜாலியாக இருக்கத் தெரியாது
கூச்ச சுபாவமுடையவர்களுக்கு ஜாலியாக இருக்கவே தெரியாது என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்! பார்ட்டி, கும்மாளம் என்று ஆயிரக்கணக்கில் செலவழித்து நாம் கூத்தடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தனக்குப் பிடித்த புத்தகத்தைப் படித்தோ, படத்தைப் பார்த்தோ இவர்கள் கூலாக இருப்பார்கள். 

இவர்கள் மக்களை வெறுப்பவர்கள்
கூச்ச சுபாவமுடையவர்களுக்கு மக்களை சுத்தமாகப் பிடிக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. இவர்களுடைய நட்பு வட்டாரம் சிறிது என்றாலும், அது மிக உண்மையானதாக இருக்கும்.

இவர்களுக்கு நல்ல பேச்சாளர்கள் அல்ல
கூச்ச சுபாவமுடையவர்கள் திறமையான பேச்சாளர்கள் மட்டுமல்ல, நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்கள். என்ன, பொது இடத்தில் உறுதியோடு பேசுவதற்கு இவர்கள் சிறிது நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் எப்போதும் தனிமை விரும்பிகள்
அப்படிச் சொல்ல முடியாது. கூச்ச சுபாவமுடையவர்கள் பொதுவாகவே நிறைய சிந்தித்து சிந்தித்து தங்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்காகவே தனிமையை நாடுகின்றனர். இவர்களுடைய உணர்வுகளையோ, கருத்துக்களையோ யாரும் மதிக்காமல் அசட்டை செய்யும் நேரத்திலும் இவர்கள் தனிமையாக இருக்க விரும்புவர்.

இவர்கள் வித்தியாசமானவர்கள்
கூச்ச சுபாவமுடையவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் இருப்பதை விரும்புவதில்லை. தாம் எதை விரும்புகிறார்களோ அதை மட்டுமே செய்வார்கள். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ள மாட்டார்கள்.
கூச்ச சுபாவமுடையவர்களைக் கேவலமாக நடத்துவதோ, பரிகாசம் செய்வதோ நமக்குத்தான் கேவலம். தங்களை எவ்வளவோ தனிமைப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தனிப்பட்ட மனிதர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top