ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால்
தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும்.இந்திய தேசிய ராணுவத்தின்ஆண்கள் படை போல் அல்லாமல்
இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே
அமைக்கப்பட்டது.
20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON