இன்றைய புனிதர் ஜூலை 7 அருளாளர் மரிய ரொமேரோ
மெனெசெஸ்
(Blessed María Romero Meneses)
மறைப் பணியாளர் : (Religious)
பிறப்பு : ஜனவரி 13, 1902 கிரனடா, நிகரகுவா (Granada, Nicaragua)
இறப்பு : ஜூலை 7, 1977 (வயது 75) லஸ் பெனிடஸ், லியோன், நிகரகுவா
(Las Peñitas, León, Nicaragua)
(Las Peñitas, León, Nicaragua)
முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 14, 2002 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
நினைவுத் திருநாள் : ஜூலை 7
அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ், ஒரு “நிகரகுவா” (Nicaragua)
குடியரசின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், “டான் பாஸ்கோவின்
சலேசிய சகோதரிகள்” (Salesian Sisters of Don Bosco) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட
உறுப்பினரும், “கோஸ்டா ரிகா’வின்” சமூக அப்போஸ்தலருமாவார். (Social Apostle of
Costa Rica).
கி.பி. 1902ம் ஆண்டு, “நிகரகுவா” (Nicaragua) குடியரசில் நடுத்தர
குடும்பத்தில் பிறந்த ரொமேரோ’வின் தந்தை பெயர் “ஃபெலிக்ஸ்” (Félix Romero Arana)
ஆகும். தாயாரின் பெயர், “அனா” (Ana Meneses Blandon) ஆகும். இவர் தமது பெற்றோரின்
எட்டு குழந்தைகளில் ஒருவர் ஆவார். பிறந்து ஒரு வாரத்திலேயே திருமுழுக்கு பெற்றார்.
1904ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் தேதி, உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்சாதனம்
பெற்ற இவர், 1909ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, “புதுநன்மை” (First
Communion) அருட்சாதனம் பெற்றார்.
கலையிலும் சங்கீதத்திலும் ஆர்வம் கொண்டு வளர்ந்ததால், இவருடைய பெற்றோர் இவருக்கு வயலின் மற்றும் பியானோ ஆகிய இசைக் கருவிகளை வாசிக்க கற்பித்தனர். பின்னர், “டான் பாஸ்கோவின் சலேசிய சகோதரிகள் பள்ளியில்” இணைந்து கல்வி கற்க ஆரம்பித்தார். எனினும் 1914ம் ஆண்டில் அவர் “வாதம் சம்பந்தமான காய்ச்சலால்” (Rheumatic Fever) நீண்ட காலம் பாதிப்படைந்தார். அக்காய்ச்சல், அவரது மீதமுள்ள வாழ்நாள் முழுதும் இருதய பாதிப்பை விட்டுச் சென்றது. ஆனால், அதிலிருந்து அவர் மீண்டபோது, அது இயற்கையிலேயே அற்புதமானதாக கருதப்பட்டது.

பூரண நம்பிக்கையுள்ள இப்பெண், 1915ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம்
நாளன்று, “கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாளின் மகள்கள்” (Daughters of Mary Help
of Christian) எனும் “மரியான் சமூகத்தில்” (Marian association) இணைந்தார். 1929ம்
ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, அவர் தமது இறுதி வார்த்தைப் பாட்டை ஏற்றார்.
1931ம் ஆண்டு, “கோஸ்டா ரிகா” (Costa Rica) தீவின் தலைநகரான “சேன்
ஜோஸ்” (San Jose) சென்றார். இது இவரது இரண்டாவது தாய் நாடாக கருதப்படுகிறது.
1933ம் ஆண்டு, கலை மற்றும் சங்கீதம் ஆகியவற்றின் ஆசிரியையானார். அங்குள்ள
பள்ளியில் பணக்கார குழந்தைகளுக்கு தட்டச்சு கற்றுக்கொடுத்தார். பெரும்
எண்ணிக்கையிலுள்ள அவரது மாணவர்கள் அவரைப்போன்றே அவருடன் இணைந்து ஏழைகளுக்கு சேவை
செய்தனர். அவரது கவனம் சமூக அபிவிருத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு
பொழுதுபோக்கு மையங்களைத் தொடங்கிய இவர், 1953ம் ஆண்டில் உணவு விநியோக
மையங்களையும் தொடங்கினார். 1961ம் ஆண்டில் ஏழை சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றினை
நிறுவினார். 1966ம் ஆண்டு, நோயுற்றோருக்காக மருந்தகம் ஒன்றினையும் நிறுவினார்.
1973ம் ஆண்டு, ஏழை குடும்பங்களுக்காக ஏழு இல்லங்களை கட்டினார்.
Singnatre of Blessed María Romero Meneses
Singnatre of Blessed María Romero Meneses
1977ம் ஆண்டு, “லியோன்” (Leon) நகரிலுள்ள “சலேசிய
அருட்சகோதரிகளின்” இல்லத்தில் (Salesian Sisters house) ஓய்வுக்காக
அனுப்பப்பட்டிருந்த மரிய ரொமேரோ மெனெசெஸ் மாரடைப்பால் தாக்குண்டு மரணமடைந்தார்.
Subash
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON