Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூலை 15 புனிதர் பொனவென்ச்சர் (St. Bonaventure)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூலை 15  புனிதர் பொனவென்ச்சர்  (St. Bonaventure) கர்தினால் ஆயர், மறைவல்லுநர் :    (Cardinal Bishop of Albano, Doctor of...
இன்றைய புனிதர் ஜூலை 15 புனிதர் பொனவென்ச்சர் (St. Bonaventure)
கர்தினால் ஆயர், மறைவல்லுநர் :  (Cardinal Bishop of Albano, Doctor of the Church)
பிறப்பு : கி.பி. 1221 பக்னோரெஜியோ, விடேர்போ பிராந்தியம், லேடியம், திருத்தந்தையர் மாநிலம் (Bagnoregio, Province of Viterbo, Latium, Papal States)
இறப்பு : ஜூலை 15, 1274 (வயது 52–53) லியோன், லியோன்னைஸ், ஆர்ல்ஸ் அரசு
(Lyon, Lyonnais, Kingdom of Arles)
புனிதர் பட்டம் : ஏப்ரல் 14, 1482 திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus IV)
நினைவுத் திருவிழா : ஜூலை 15
புனிதர் பொனவென்ச்சர், இத்தாலிய மத்திய கால இறையியலாளரும் (Italian Medieval Franciscan), மெய்யியளாலரும் (Scholastic Theologian) ஆவார். ஃபிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக (The seventh Minister General of the Order of Friars Minor) பணியாற்றியவர் இவர், அல்பேனோவின் கர்தினல்-ஆயர் (Cardinal Bishop of Albano) ஆவார். 1482ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் தேதியன்று, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus IV) இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus V) 1588ம் ஆண்டு, இவரை திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என அறிவித்தார். இவரை "தெய்வீக மறைவல்லுநர்" (Seraphic Doctor) எனவும் அழைப்பர்.
“கியோவன்னி டி ஃபிடான்ஸா” (Giovanni di Fidanza) எனும் இயற்பெயர் கொண்ட பொனவென்ச்சரின் பெற்றோரின் பெயரைத் தவிர இவரைப்பற்றிய குழந்தைப் பருவம் பற்றின எந்த தகவல்களும் இல்லை. இவரது தந்தையாரின் பெயரும் “கியோவன்னி டி ஃபிடான்ஸா” (Giovanni di Fidanza) ஆகும். தாயாரின் பெயர் “மரியா ரிடெல்லா” (Maria Ritella) ஆகும். அப்போதைய திருத்தந்தையர் மாநிலத்தின் (Papal States) பிராந்தியமான “ஊம்ப்ரியாவின்” (Umbria) அருகேயுள்ள “பக்னோரெஜியோ” (Bagnoregio) எனும் இடத்தில் பிறந்தவர்.
கி.பி. 1243ம் ஆண்டு, தமது 22ம் வயதில், பொனவென்ச்சர் ஃபிரான்சிஸ்கன் சபையில் (Franciscan Order) சேர்ந்து, “பாரிஸ் பல்கலையில்” (University of Paris) “அலெக்சாண்டர்” (Alexander of Hales) மற்றும் “ஜான்” (John of Rochelle) ஆகிய இரண்டு புகழ் பெற்ற ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார். பத்தே வருடங்களில் (1253ம் ஆண்டு) பாரிஸ் நகர ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் “பீட்டர் லொம்பார்ட்” (Peter Lombard) எழுதிய “வசனங்களின் நான்கு புத்தகங்கள்” (The Four Books of Sentences) என்ற இறையியல் புத்தக விரிவுரையாளராகும் பெருமை நான்கு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு கிட்டியது.
தமது எதிர்ப்பாளர்களின் நிந்தைகளிலிருந்து சபையை வெற்றிகரமாக பாதுகாத்த பின்னர், சபையின் தலைவராக (Minister General of the Order of Friars Minor) பொனவென்ச்சர் தேர்வு செய்யப்பட்டார். 1265ம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ம் நாளன்று, “யோர்க் உயர்மறைமாவட்ட பேராயராக” (Archbishop of York) நியமனம் பெற்றார். ஆனால், பேராயராக அருட்பொழிவு செய்யப்படாமலேயே, 1266ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தமது நியமனத்தை கைவிட்டார்.
திருத்தந்தை “பத்தாம் கிரகோரியின்” (Pope Gregory X) தேர்தல் நடக்க பொனவென்ச்சர் ஒரு கருவியாக இருந்திருக்கிறார். திருத்தந்தை இவருக்கு “அல்பேனோவின் கர்தினால் ஆயர்” (Cardinal Bishop of Albano) எனும் பதவியை பரிசளித்து மகிழ்ந்தார். அத்துடன், 1274ம் ஆண்டு “லியோன்” நகரில் நடக்கவிருந்த இரண்டாம் பெரிய ஆலோசனை மன்றத்தில் (Great Second Council of Lyon) பங்கேற்க அறிவுறுத்தினார். இரண்டாம் பெரிய ஆலோசனை மன்றத்தில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், கிரேக்க மற்றும் லத்தீன் திருச்சபைகளின் ஐக்கியத்திற்கு வழிவகுத்தது.
பொனவென்ச்சர், திடீரென்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மரித்துப் போனார். அவர் ஃபிரான்சிஸ்கன் துறவியரை மிதமான, அறிவார்ந்த வகையில் வழிநடத்தினார். அது, இயேசு சபையினர் வரும்வரை அதற்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுத் தந்தது. அவரது இறையியல், முற்றிலும் நம்பிக்கை மற்றும் காரணங்களை ஒருங்கிணைக்க ஒரு முயற்சி மூலம் குறிக்கப்பட்டது. விசுவாசத்தில் தொடங்கும் அறிவினை மனித இனத்துக்கு தரும் கிறிஸ்துவே உண்மையான தலைவர் என்று எண்ணினார். அறிவார்ந்த புரிதல் மூலம் உருவாக்கப்பட்டு, கடவுளின் ஐக்கியம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது என்று நம்பினார்.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top