Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்.... nelliyampathy tamil
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....   காடுகளை சுற்றி பார்க்க தரமான செம்மையான இடம்,கோவையில இருந்து 120 கிலோ ...

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்.... 

காடுகளை சுற்றி பார்க்க தரமான செம்மையான இடம்,கோவையில இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதியில் பல வியூவ் பாய்ண்டுகளும்,அருவிகளும்,அடர்ந்த வனபகுதிகளும்,தேயிலை,காப்பி,ஆரஞ்சு தோட்டங்களும் உள்ளது...இனி விரிவாக கொஞ்சம் நெல்லியம்பதியை பார்போம்...

கோவையில் இருந்து கா.சாவடி வழியாக வேலந்தாவளம் (தமிழக- கேரள சோதனைசாவடி)வழியாக சித்தூர்,புதுநகரம் வழியாக கொல்லங்கோட்டில் இருந்து நென்மாரா இந்த நென்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு மலைவழி சாலை வழியாக பயணிக்க வேண்டும்..முக்கிய தேவையான பொருட்களை நென்மாரவில் வாங்கிகொள்ளலாம்,நெல்லியம்பதி மலை சாலையில் கடைகள் இல்லை எனவே நென்மாராவில் வாங்கிகொள்வது நல்லது,நெல்லியம்பதியில் பெட்ரோல் பங்க்குள் இல்லை,அங்குள்ள சில கடைகளில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 விற்கப்படுகிறது.. நென்மாரா டவுனை தாண்டி நெல்லியம்பதி சாலையில் 3 கள்ளு கடைகள் உள்ளது..அந்த சாலையில் போகும்போது மலையேறுவதற்க்கு முன்பாக "போத்துண்டி டேம்" உள்ளது நுழைவு கட்டணம் ரூ.10 ,அந்த டேம்மிற்கு கீழ் பூங்கா உள்ளது, மேலே டேமிற்க்கு சென்றால் அழகான நெல்லியம்பதி மலைகளும்,அருவிகளும் நன்றாக தெரியும்,அங்கே போட்டோ எடுப்பதற்க்கு நல்ல அருமையான இடம்,பின்னர் டேம் விட்டு வெளியே வந்தால் சில கடைகள் உள்ளது...
 

போத்துண்டி டேம்மிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் மலைபகுதி ஆரம்பமாகிறது..அந்த இடத்தில் ஒரு பாரஸ்டு செக்போஸ்ட் உள்ளது,அங்கே உங்களது வண்டி எண்களை பதிவு செய்துவிட்டு மலையேற ஆரமிக்கலாம்..சிறிது தூரத்தில் போத்துண்டி அணையின் மேல் பக்க வியூவ் தெரியும்,அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சிறிய அருவி ரோட்டின் ஓரத்தில் ஓடிகொண்டு இருக்கும் .உடனே அங்கே வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம்.நீங்கள் அந்த சாலையில் 45 க்கும் மேற்பட்ட சிறிய அருவிகள் மற்றும் 15 கொஞ்சம் பெரிய அருவிகளை காணலாம்..வேறு எங்கும் இதுபோன்று அருவிகள் நிறைந்த மலைசாலையை பார்க்க முடியாது,போகும் வழியில் நல்ல பனிமூட்டமாக இருக்கும்..அருவிகள் நிறைந்த ,பனிமூட்டமான சாலையில் பயணிப்பது நண்றாக இருக்கும்..போகும் வழியெல்லாம் புகைப்படம் எடுப்பதற்க்கு அழகான அருவிகளும்,வியூவ் பாய்ண்டுகளும்,அடர்ந்த காடுகளும் உள்ளது..சாலையில் யானை சானங்களை பார்கலாம்..அதிர்ஷ்டம் இருந்தால் யானையை கூட பார்கலாம்...அப்படியே பயணித்தால் "கைகாட்டி" என்ற ஊர் வரும் கைகாட்டியில் இருந்து வலதுபுறமாக சாலை பிரியும்...வலதுபுறமாக சென்றால் நிறைய இடங்கள் உள்ளது... வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்றால் அங்கும் பல இடங்கள் உள்ளது.. இனி சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை பார்கலாம்..

1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்
 
2.காரசூரி வியூவ்பாய்ண்ட்
 
3.மான்பாரா பீக் (அல்லது)ராஜாஸ் கிளிப்
 
4.கேசவன்பாரா வீயூவ்பாய்ண்ட்
5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்
6.காரபார வாட்டர்பால்ஸ்
 
7.விக்டோரியா சர்ச் ஹில் வியீவ்பாய்ண்ட்
8.மிஸ்டி வேலி ரெசார்ட்(தங்குவதற்கு)
9.மட்டுமலா வியூவ்பாய்ண்டு(ட்ரெக்கிங்)
 ,ஆனாமடா எஸ்டேட்(ட்ரெக்கிங்) வரையாட்டுமலா(ட்ரெக்கிங்) 

இனி ஒவ்வொரு இடத்தையும் விரிவாக பார்போம்..

1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்டு(seetharagundu viewpoint):--

இந்த சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட் பகுதி போப்ஸ் எஸ்டேட்(POABS ESTATE)பகுதியில் உள்ளது ,இது தனியாருக்கு சொந்தமான இடம்..இப்பகுதி முழுவதும் காப்பி,தேயிலை,ஆரஞ்ச்,ஏலக்காய்,மிளகு தோட்டங்களும்,அடர்ந்த காடுகளும்,அருவிகளும் உள்ளது..இலங்கையில் இருந்து சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு செல்லும் வழியில் இப்பகுதில் சில நாட்கள் தங்கி இருந்ததால் இப்பகுதிக்கு "சீதாரகுண்டு"என்று பெயர் வந்ததாம் ...போப்ஸ் எஸ்டேட்டில் பயணித்தால் சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்க்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு 100 மீட்டர் நடந்தால் வியூவ்பாய்ண்டை சென்றடையலாம்..பார்த்தவுடனே
 பதற வைக்கும் ,அபாயகரமான வியூவ்பாய்ண்ட்...அங்கிருந்து பொள்ளாச்சி பகுதிகளை காண்லாம்...இரண்டு அனைகட்டுகளும் பார்கலாம்...வியூவ்பாய்ண்ட்சுமார் அரை கிலோ மீமீட்டருக்கு நீண்டு இருக்கும்,,அப்படியே நடந்தால் 7 ஒரு பெரிய நீர்வீழ்ச்சி பார்கலாம்..புகைபடம் எடுப்பதற்க்கு சிறந்த பகுதி..வியூவ்பாய்ண்ட் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுப்பது திரில் என்றாலும் கீழே விழுந்தால் அவ்வளவுதான்...அப்பகுதில் உள்ள பெரிய புற்களை பறித்து நுகர்ந்து பார்தால் அது எலுமிச்சை வாசம் வரும்..அந்த புற்களின் பெயர் லெமன் கிராஸ் (lemon GrasGrass) இதனை தைலமாக தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்கிறார்கள் ..அந்த பள்ளதாக்கில் மேகங்கள் மிதப்பதையும் காண்லாம்..பார்த்துவிட்டு வாகனங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது இந்த கடை போப்ஸ் எஸ்டேட் நடத்தும் கடை ஆகும்..இங்கு அங்கு விளையும் தேயிலை, காப்பி தூள் ஆகியவை விற்பனை செய்யப்படும்... நடந்து வந்த களைப்பில் அங்கே தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து வேறு இடம் செல்லலாம்..

2.காரசூரி வியூவ்பாய்ண்ட்(Karashoori viewpoint)
 
இந்த காரசூரி பகுதிக்கு சாதாரண வாகனங்கள் செல்வது கடினம்..4×4 கார்கள் அல்லது ஜீப்கள் மட்டும் செல்ல முடியும்..போகும் பாதை மிகவும் கரடுகரடுமுரடான மிகவும் உயரமான பகுதி..எனவே நெல்லியம்பதியில் ஒரு ஜீப்பை வாடைக்கைக்கு எடுத்து கொண்டு இப்பகுதிக்கு செல்லலாம்..ஜீப் வாடகை ரூ.1200 முதல் 1600 வரை சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வார்கள்...காரசூரி பகுதியை அடைய ஜீப்பில் பயணம் செய்து வனசோதனை சாவடி வழியாக அடர்ந்த காட்டுவழியாக பயணம் செய்து காரசூரியை அடையலாம்...போகும் வழி காட்டு யானைகள,காட்டெருமைகள்,வன விலங்குகள் அதிகம் உலாவும் பகுதி..அந்த வழியாக பயணம் செய்து காரசூரி வியூவ்பாய்ண்ட் அடையலாம்..பரந்து விரிந்து கிடக்கும் புல் மேடுகள்,பனிமூட்டங்கள் உங்களை ஆர்பரிக்க செய்யும்...அங்கு ஒரு பழைமையான கோவில் உள்ளது...புகைப்படம் எடுப்பதற்கு மிக சிறந்த இடம்..பல மலையாள திரைப்படங்களில் இந்த பகுதியை காணலாம்... 

3.மான்பாரா பீக் (அல்லது) ராஜாஸ் கிளிப் Mampara peak (or) raja's cliff 
காரசூரிக்கு அடுத்து இந்த மான்பாரா பீக் உள்ளது..பள்ளதாக்குகள் மற்றும் புல்மேடுகள் உள்ள பனிபடரும் பகுதி,இப்பகுதிக்கும் ஜீப்பில்தான் செல்ல வேண்டும்...புகைப்படம் எடுக்க அருமையான இடம்..அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி,அதிகமாக மழை பொழியும் நேரங்களில் இப்பகுதிக்கு வனத்துறை அனுமதிக்க மாட்டார்கள்... செங்குத்தான கரடுமுரடான பாதைகளை கொண்டது..யானைகளை அடிக்கடி இப்பகுதியில் பார்கலாம்...இயற்கை கொஞ்சும் சிறந்த இடம்..வியூவ்பாய்ண்ட் திரில்லாக இருக்கும்..கண்டிபாக பார்க்க வேண்டிய இடம் ...
 

4.கேசவன் பாரா வியூவ்பாய்ண்ட்(kesavan para viewpoint)
 
இப்பகுதி கைக்காட்டியில் இருந்து வலதுபக்க சாலையில் ஒரு 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திகிலான வியூவ்பாய்ண்ட்.. AVT tea estate எதிரில் அமைந்துள்ள இந்த கேசவன் பாராவிற்க்கு ஜீப் தேவையில்லை...வாகனங்களை AVT சாலையில் நிறுத்திவிட்டு ஒரு அரைகிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் ..இதுவும் சீத்தாரகுண்டுவை போல அபாயகரமான அழகான பள்ளதாக்கு...அடர்ந்த காடுகளுக்குள் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்...பசுமையான பள்ளதாக்கு,கொஞ்சம் நடக்க வேண்டும்...நடந்தால் காடுகளின் சொர்க்கத்தை இங்கே காணலாம்...
 

5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்(greenland farm house)
 
போப்ஸ் எஸ்டேட் தாண்டி கீரின் லேண்ட் பார்ம் உள்ளது..இங்கு தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளது காடுகளுக்கு நடுவே இந்த பார்ம் உள்ளது..இந்த கீரின் லேண்ட நிர்வாகத்தினர் வைத்திருக்கும் பார்ம் ஹவுசில் ,காட்டுகோழிகள்,வெளிநாட்டு அரிய கோழி வகைகள்,அரிய வகை புறாக்கள்,மலை ஆடுகள்,நாய்கள்,வாத்துக்கள்
 ஈமு கோழிகள் ,கருங்கோழிகள்(கடக்நாத்) ,மலை எருமைமாடுகள் வளர்க்கபடுகின்றன...இங்கு கருங்கோலிகளின் முட்டை விற்க்கப்படுகின்றது விலை ரூ.30 ..இந்த கருங்கோலிகளின் கறி கருப்பு நிறமாக இருக்கும்,இரத்தம்,முட்டை,எல்லாமே கருப்பாக இருக்கும்..மருத்துவ குணம் இந்த கருங்கோலி கறிக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.... 
 

6.காரபார நீர்வீழ்ச்சி (karapara waterfall's) 
நெல்லியம்பதியில் திரும்பிய பக்கமெல்லாம் நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் ..இந்த காரபார நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது..AVT estate ரோடு வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது,வாகனங்கள் நிறுத்திவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளின் வழியே நடந்து சென்றால் இந்த காரபாரா அருவியை அடையலாம்..இங்கு ஒரு தொங்குபாலம் உள்ளது,குளிப்பதற்க்கு நல்ல இடம்..இங்குள்ள அருவி அருகில் மணிபிளாண்ட் செடிகள் காணலாம்...கரடுமுரடான பாதையை கொண்டு இருப்பதால் நடந்து செல்ல வேண்டும்,அடர்ந்த காடுகளின் நடுவே அருவியில் குளிப்பது உற்சாகத்தை தரும்..அட்டை பூச்சிகள் அதிகம் உள்ள பகுதி,கவனம் தேவை..
 


7.விக்டோரியா சர்ச் ஹில் வியூவ்பாய்ண்ட்(Victoria church hill view point)
.காரபாரா நீர்வீழ்ச்சி போகும் வழியில் இரண்டு ரோடுகள் பிரியும் இடது புறமாக ஒரு சிறிய பாலத்தை கடந்து சென்றால் இந்த விக்டோரியா வியூவ் பாய்ண்டை அடையலாம்..இந்த இடத்திற்க்கு செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் காட்டில் பயணிக்க வேண்டும்,அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால் கவனமாக செல்ல வேண்டும் யானைகள்,காடெருமைகள் நிறைந்த பகுதி,இந்த பகுதியில் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட பழைமையான் சர்ச் உள்ளது ,இந்த வியூவ்பாண்டில் இருந்து பார்தால் துனைக்கடவு,பெருவளிபள்ளம்,பரம்பிக்குளம் அணைகட்டு பகுதிகளை காணலாம்,பரம்பிகுளத்தின் அடர்ந்த காடுகளை காணலாம்... 
 


8.மிஸ்டி வேலி ரெசார்ட்(misty Valley resort)
 
நெல்லியம்பதியின் மிக முக்கியமான இடம்..,காரசூரி வியூவ்பாய்ண்ட்டில் இருந்து சுமார் முக்கால் மணி நேரம் மிகவும் அடர்ந்த வழியே 4×4 ஜீப் மூலம் பயணம் செய்தால் இந்த ரெசார்டை அடையலாம்..மிகவும் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த ரெசார்டில் டிரெக்கிங் வசதி உள்ளது.ஒரு நாளைக்கு ரூ.2500 கட்டணம் தங்குவதற்க்கு,இரவு நேர டிரெக்கிங் ரூ.600 கட்டணம்.இதன் சிறப்பம்சம் அடர்ந்த மழை காடுகளுக்கு நடுவே அமைந்திருப்பதுதான்..இப்படிஒரு ரெசார்டை நீங்கள் பார்பது மிக அரிது,அந்த ரெசார்டில் இருந்து தனியாக கரடி பங்களா, ஹெரிடேஜ் பங்களா உள்ளன..இதன் தங்கும் கட்டண விவரம் தெரியவில்லை..திரில் பயணம்,காடுகளின் அழகை ரசிக்க விரும்புவர்கள் இங்கே தங்கலாம்.
 

9.மட்டுமலா(mattumala viewpoint),ஆனமடா எஸ்டேட் (,anamada estate) ,வரையாட்டுமலா (varaiyattumala)
 
இந்த 3 பகுதிகளும் அந்த ரெசார்டை அடுத்து அமைந்துள்ளது, ஆனமடா எஸ்டேட் என்று கூட சொல்வார்கள்,இவை தனியார்வசம் உள்ள அடர்ந்த காகாடுகள் மிக்க பகுதியாகும்,எனவே ரெசார்டில் தங்கி இங்குள்ள பகுதிகளை வனத்துறையின் கட்டுபாடுகள் இன்றி மிகவும் சுதந்திரமாக சுற்றிபார்கலாம்,மேலே சொன்ன 3 இடங்களும் மிகவும் அழகான இடங்கள்,நேரில் சென்று பார்தால் தெரியும் ,வரையாட்டுமலாவில் வரையாடுகள் காணலாம்,யானை,சிறுத்தை,புலிகள்,கரடிகள், காட்டெருமைகள் வாழும் பகுதி,அடர்ந்த காடுகள் மிக்கபகுதி,இயற்கையை விரும்பும் நபர்களுக்கு சிறந்த பகுதி,ட்ரெக்கிங் செய்ய சிறந்த இடம்,வனவிலங்களை கண்டிப்பாக பார்கலாம்... குறிப்பு: சில இடங்கள் google mapல் தெரியாது என்பதால் அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டு வழி தெரிந்து கொள்ளுங்கள்,சில இடங்களுக்கு கண்டிப்பாக 4×4 வாகனங்கள் தேவை,குளிர் சுமார் 16°c முதல் 18°c வரை இருக்கும்,சில நேரங்களில் 16 க்கும் கீழ் குறையும்,அடிக்கடி மழை பெய்யும் பகுதி,எனவே அதற்கு தக்க முன்னேற்பாடுகளை செய்து கொண்டு இயற்கையை ரசித்துவாருங்கள்,தங்குவதற்கு 5 முதல் 8 தங்கும் விடுதிகள் உள்ளன,டார்மிட்டரி வசதி படுக்கை விடுதிகளும் உள்ளன,கேரள அரசின் சார்பில் டிரெக்கிங் செல்பவர்களுக்கு கைக்காட்டி பகுதியில் விடுதி வசதியும் உள்ளது.சுற்றுலா வருபவர்களும் அங்கு தங்கலாம்,ஓணம் பண்டிகை சமயங்களில் இங்கு நல்ல கூட்டம் இருக்கும்.

Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top