இன்றைய புனிதர் மே 15 புனிதர் சோஃபியா (St. Sophia of Rome)
மறைசாட்சி : (Martyr)
பிறப்பு : இத்தாலி
இறப்பு : கி.பி. 137 ரோம்
நினைவுத் திருநாள் : மே 15
front of the Saint Sofia church in Bulgaria's
capital
புனிதர் சோஃபியா, ஓர் திருமணமான பெண் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் (Faith). இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை (Hope). மூன்றாவது குழந்தையின் பெயர் "கருணை" (Charity).
1 கொரி 13-ல் குறிப்பிடும்
இறைவார்த்தைகளை
தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார் சோஃபியா. கிறிஸ்துவை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள்.
கி.பி. 117ம் ஆண்டு முதல், கி.பி. 138ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் "ஹட்ரியான்" (Hadrian) எனும் கொடுங்கோல் அரசனில் ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டனர்.
The Relics of Saint Sophia
of Rome
கிறிஸ்துவில்
கொண்ட விசுவாசத்தினால் சோஃபியாவும் அவரது மூன்று மகள்களும் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள். குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோஃபியாவையும் கொன்றார்கள். சோஃபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோஃபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள்.
Hagia_Sophia - Holy Wisdom
கி.பி. 778ம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace) உள்ள "எஸ்ச்சாவ்" (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவற மடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோஃபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோஃபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோஃபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.
Subash
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON