† இன்றைய புனிதர் † (ஏப்ரல் 8) ✠ புனிதர் ஜூலி பில்லியர்ட் ✠ (St. Julie Billiart)
சபை நிறுவனர் : (Founder of Congregation)
பிறப்பு : ஜூலை 12, 1751 குவில்லி, பிகார்டி, ஃபிரான்ஸ் (Cuvilly, Picardy, France)
இறப்பு : ஏப்ரல் 8, 1816 (வயது 64) நாமுர், பெல்ஜியம் (Namur, Belgium)
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
அருளாளர் பட்டம் : மே 13, 1906 திருத்தந்தை 10ம் பயஸ் (Pope Pius X)
புனிதர் பட்டம் : ஜூன் 22, 1969 திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI)
நினைவுத் திருநாள் : ஏப்ரல் 8 பாதுகாவல் : ஏழ்மை மற்றும் நோய்களுக்கெதிராக
புனிதர் ஜூலி பில்லியர்ட் ஒரு ஃபிரெஞ்ச் மத தலைவரும், 'நோட்ரே டேம்' எனும் ஸ்தல கத்தோலிக்க சகோதரிகளின் சபை'யின் (Congregation of the Sisters of Notre Dame de Namur) நிறுவனரும் ஆவார். இவரே அச்சபையின் முதலாவது தலைவரும் (Superior General) ஆவார்.
கி.பி. 1751ம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த ஜூலியின் தந்தை “ஜீன்-ஃபிரான்கொய்ஸ் பில்லியர்ட்” (Jean-François Billiart) ஆவார். இவரது தாயார், “மேரி-லூயிஸ்-அன்டோய்நெட்” (Marie-Louise-Antoinette) ஆவர்.
வசதி வாய்ப்புள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பிறந்ததிலிருந்தே மறைக்கல்வியை நன்கு கற்று தேர்ந்து, கனிவான இதயத்துடனும், திறந்த மனதுடனும் சுற்றுப்புறமுள்ளவர்களுக்கும் மறைக்கல்வியை கற்பிப்பதில் ஆர்வமாயிருந்தார். நோய்வாய்ப்பட்டோரையும் ஏழைகளையும் உதவுவதில் ஆர்வம் காட்டினார்.
St. Julie Billiart using scissors
கி.பி. 1774ம் ஆண்டு இவரின் தந்தை முடக்குவாத நோயால் தாக்கப்பட்டதால், தன் தந்தையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டார். சில வருடங்களிலேயே அவரும் படுக்கையிலேயே கிடக்கும் நிலை வந்தது. அடுத்து சுமார் இருபது வருடங்கள் அவர் தமது படுக்கையில் இருந்தபடியே மறை கல்வி கற்பிப்பதிலும் ஆன்மீக ஆலோசனைகள் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தார். அவரது தூய்மையை கேள்விப்பட்ட பலர் அவரை நாடி வந்து அவரது ஆன்மீக ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர்.
இதற்கிடையே, கி.பி. 1789ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தது. தப்பியோடிய குருக்களுடன் இவர் கூட்டணியாக இருந்தது புரட்சி படைகளுக்கு தெரிய வந்தபோது, இவர் சில நண்பர்களின் உதவியுடன் ஊருக்கு வெளியே தலைமறைவாக இருந்தார். அப்போதிருந்து பல வருடங்கள் தம்மால் நடக்க இயலாத நிலையிலும் வீடு வீடாக சென்று மறை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு கால கட்டத்தில், அவர் தமது பேச்சுத் திறனையும் இழந்தார்.
ஆனால் இக்காலகட்டம், ஜூலியின் ஆன்மீக வெற்றியின் காரணமாகவும் அமைந்தது. ஒருமுறை அவர் கண்ட திருக்காட்சி ஒன்றில், துறவற ஆடையணிந்த பெண்கள் குழாம் ஒன்று கல்வாரி மலையில் கூடி நிற்பதையும், அசரீரி குரல் ஒன்று, "இதோ, சிலுவையை அடையாளமாக கொண்ட அமைப்பின் மகள்கள்" என்றது.
இவ்வாறு தமது வாழ்க்கையை நகர்த்திய ஜூலி, “ஃபிரான்காய்ஸ் ப்ளின் தி பௌர்டென்" (Françoise Blin de Bourdon) என்னும் ஒரு உயர்குடி பெண்ணுடன் அறிமுகம் ஆனார். அவரும் ஜூலியின் விசுவாசம் பரப்பும் ஆர்வத்தினை பகிர்ந்து கொண்டார். 1803ம் ஆண்டு, இவ்விரு பெண்களும் "நோட்ரே டாம்" (Institute of Notre Dame) என்ற அமைப்பினை தொடங்கினர். இவ்வமைப்பு, ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் மறைக் கல்வி பயிற்சி ஆகியனவற்றில் தம்மை அர்ப்பணித்தது. அடுத்த வருடத்திலேயே அதன் முதல் அருட்சகோதரிகள் தமது மத ஆன்மீக பிரமாணம் ஏற்றனர். அதிசயமாக, அதே வருடம், ஜூலி தமது நோய்களிலிருந்து விடுபட்டார். சுமார் இருபத்திரெண்டு வருடங்களின் பின்னர் அவரால் நன்கு நடக்கவும் பேசவும் முடிந்தது.
Saint_Julie_Billiart_Catholic_Church_(Hamilton,_Ohio)
ஏழைகளின் தேவைகளில் கவனமாக இருந்த ஜூலி, சமூகத்தின் பிற வகுப்பு மக்களுக்கும் கிறிஸ்தவ கல்வியின் அவசியத்தை உணர்ந்தார். "நோட்ரே டாம்" அமைப்பினை தொடங்கியது முதல் அவரது மரணம் வரை ஓயாமல் பணியாற்றிய ஜூலி, ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பல்வேறு பள்ளிகளை நிறுவுவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். ஏழை பணக்காரன் பாகுபாடின்றி தொழில் முனையும் குழுக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சேவையாற்றுவதில் அவரது பள்ளிகள் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.ஜூலியும் ஃஃபிரான்காய்ஸும் தமது தலைமை இல்லத்தை (motherhouse) பெல்ஜியத்திலுள்ள "நாமுர்" (Namur, Belgium) என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர்.
கி.பி. 1816ம் ஆண்டு், “பெல்ஜியம்” (Belgium) நாட்டின் “நாமுர்” (Namur) நகரிலுள்ள இவரது சபையின் தலைமை இல்லத்தில் 64 வயதான ஜூலி மரணமடைந்தார்.
அமெரிக்க (America) நாடுகள் மற்றும் “ஐக்கிய அரசு” (United Kingdom) நாடுகளிலுள்ள "நோட்ரே டாம் பள்ளிகள்" (Notre Dame" schools) உள்ளிட்ட அநேக பள்ளிகள் மற்றும் “நோட்ரே டாம் டி நாமுர் பலகலைகழகம்” (Notre Dame de Namur University) ஆகியன, இவரை கௌரவிக்கும் விதமாக இவரது பெயரில் இயங்குகின்றன.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON