நமது அனவைருக்கும் தேவையான மூன்று அடிப்படை விசயங்கள் உணவு,உடை, இருப்பிடம்
போன்றவை ஆகும். அவற்றுள் உணவும் உடையும்நமது
விருப்பத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப மாறுபட்டுக்கொண்டே
இருக்கும்.ஆனால் இருப்பிடம் ஒன்று மட்டும் நமது பொருளாதார நிலை அடிப்படையில்
அமைந்தாலும் கூட ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்பது அவர்களுக்கு மனதிற்கு
அமைதியும், இனிமையும், திருப்தியினையும் கொடுக்கும் வகையில்
அமைய வேண்டும் என்பதே. காலை முதல் மாலை வரை அலுவலகப் பணிச் சுமையினை
முடித்து வீட்டிற்கு வந்தால் நமது வீடு நம்மை வரவேற்று உடலுக்கும் மனதிற்கும்
புத்துணர்வினைத் தர வேண்டும் என்ற எதிரபார்ப்புஉள்ளது. வீட்;டில் உள்ள
ஒவ்வொரு செங்கல்லும், கதவும், ஐன்னலும் நாம்
பார்த்துத் தேர்வு செய்து கட்டியிருப்போம். வீட்டின்
வெளிப்புறம் உள்ள இடத்தினை நமக்குப் பிடித்த பூக்கள், மரங்கள், புல்;வெளி என
அமைத்திருப்போம்.
வீட்டுச்சுவர்:-
“என்ன, அப்படி வீட்டில் இருக்கிறது?” என்றுதானே
யோசிக்கிறீர்கள். வீட்டின் உள்புறம் உள்ள தட்ப வெப்ப நிலையினை
நிர்ணயிப்பது வீட்டின் சுவர்களே.
முந்தைய காலத்தில் கருங்கற்களால் ஆன கட்டிடங்களைப் பார்த்திருப்போம்.எவ்வளவு
கோடை காலமாக இருந்தாலும் வீட்டின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணரலாம். குளிர்காலங்களில்
அதிகம் குளிராமல் மிதமான
குளிர்ச்சியுடன் இருக்கும். அதற்கு அந்த வீட்டின் சுவர் பெரும் பங்கு
வகிக்கிறது.
கருங்கற்களால் வீட்டினைக் கட்டுவது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல. ஆகவே நாம்
கட்டுகின்ற வீட்டின் வெளிப்புறச் சுவரினை நாம் சிறிது கவனித்துக் கொண்டாலே நாம்
நினைத்த படி வீட்டுத் தட்ப வெப்பச் சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
பசுமைச் சுவர்:-
வீட்டுச்சுவரில் அதிகமாக வெயில்படும் சுவரினைத் தேர்வு செய்து கொள்ள
வேண்டும்.வடக்கு மற்றும் தெற்குப்புறச் சுவர்களை விட கிழக்கு மற்றும் மேற்குப்
புறச் சுவர்கள் அதிக அளவில் “சூரிய கதிர்கள்” பட்டுச் சூடாகின்றன. எனவே இந்த
இரண்டு பக்கங்களிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சுவற்றில்
நேரடியாக சூரிய ஒளி படும் போது அந்த வெப்பத்தினைச் சுவர் உள் வாங்கி அதனை
வீட்டிற்குள் அனுப்புகிறது. வீட்டினுள் காற்று தேவையென மின் விசிறியினை
இயக்கும் போது அதிக உஷ்ணமாக காற்று வருவதை உணர்ந்திருப்போம். அதற்குக்
காரணம்
வீட்டின் சுவர்கள் வழியாக நாம் பெறும் உஷ்ணமே. இதனை
குறைப்பதற்காகவே பசுமைச் சுவர்களை உருவாக்கலாம்.
பசுமைச் சுவர் உருவாக்குவது எப்படி?
நமது வீட்டின் மேலே பசுமையான ஒரு போர்வையை போர்த்தியது போன்று செடிகளால்
உருவாக்குவதே பசுமைச் சுவர் ஆகும். பெரும்பாலும் கொடி வகைத் தாவரங்கள் இதற்குப்
பெரிதும் பயன்படுகின்றன. அந்த கொடி வகைகள் இரண்டு வகைப்படும்.
ஒன்று பற்றுக்கம்பிகளின் துணையுடன் தொற்றிப்படர்ந்து வளரும் கொடிகள்.மற்றது
பற்றுக் கம்பிகள் இல்லாமல் வளரும் இயல்புடையது. “தும்பர்ஜியா” வகைக்கொடிகள் முதல் வகையிலும், ஐவி வகைக்
கொடிகள் இரண்டாவது வகையிலும்
உதாரணமாகச் சொல்லலாம். ஜப்பான், சீனா மற்றும் சில நாடுகளில் மிக உயரமான
கட்டிடங்களின் பக்கச் சுவர்களிலும், மேற்கூரையிலும் கீரைகள், காய்கறிகள்,கால்நடைத்
தீவனப் பயிர்கள், பசுமையான அழகிய புல்தரைகள் போன்றவைகளை
உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நிலத்தை மட்டுமே நம்பி, பயிர்ச்
சாகுபடி செய்ய வேண்ழய நிலை மாற்றப்பட்டுள்ளது. பசுமைத் சுவர்
இருப்பதால் அந்த கட்டிடங்களுக்கு
உட்புறமும் மிகவும் குளிர்ச்சியாகவும் சுத்தமானதாகவும் அமைந்து விடுகிறது.
கம்பியினால் ஆன வலை போன்ற அமைப்புகளை உருவாக்கலாம். அல்லதுகடைகளில்
விற்பனைக்கு உள்ள வலைகளை வாங்கி வீட்டின் வெளிச்சுவற்றில் பொருத்த வேண்டும். சுவருக்கும்
வலைக்கும் இடையே 10 முதல் 15 செ.மீ இடைவெளி இருப்பது நலம். அப்;படி செய்யும்
போது சுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் இருக்கும். நாம் வளர்க்க
இருக்கும் கொடிகளைத்
தொட்டிகளில் வளரும் வகையில் அமைத்து அதிலிருந்து கொடிகளை வலைகளின் மீது
படர்ந்து வளரும் வகையில் அமைக்க வேண்டும். கொடிகளுக்குத் தேவையான உரம், தண்ணீர்
ஆகியவற்றைத் தொட்டிகளிலேயே கொடுத்து விடலாம்.
பசுமைச் சுவருக்கு உகந்த கொடிகள்:-
முல்லை(mullai)ஜாதிமல்லி (அல்லது) பிச்சி(Pitchi)தும்பர்ஜியா (thunberigia)ஐவி கொடி(Ivy)வெரனோனியாக் கொடி (அல்லது) போர்டிகோக் கொடி(vernonia)ரங்கூன் கொடி
(Rangoon creeper)
மாதவிக் கொடி(hiptage) காகிதப் பூ(Bougainvillea)போன்ற கொடிகளை எளிதாகப் பசுமைச் சுவர்
உருவாக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம். பெரும்பாலும் இந்தக் கொடிகளின் தண்டுப்
பகுதியினை வெட்டி, வேர் விடச் செய்யும் வகையில் பனிக்
குடில்களில் (mist chamber)வைத்து புதிய செடிகளை உருவாக்குவது எளிது. அதன் மூலம்
புதியசெடிகளை வெவ்வேறு இடங்களில் நடவு செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON