Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMICOMPOS
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நான் ‘ நம்மாழ்வார் ’ ஐயாவின் வழியைப் பின்பற்றுபவன் என்று மிகுந்த பெருமையுடன் கூறினார்திரு.செ.கண்ணன். திருமால் இருஞ்சோலை மண்புழுப் பண்...

நான் நம்மாழ்வார்ஐயாவின் வழியைப் பின்பற்றுபவன் என்று மிகுந்த பெருமையுடன் கூறினார்திரு.செ.கண்ணன். திருமால் இருஞ்சோலை மண்புழுப் பண்ணையின் உரிமையாளர். அவர் தனது பண்ணையைப் பற்றிக் கூறும் பொழுது, என்னோட பண்ணைக்குப் பெயர் வைத்ததுநம்மாழ்வார் ஐயாதான் என்றும், இருஞ்சோலை என்பதன் பொருள் கடவுள் கண்ணனைக் குறிப்பதாகக் கூறினார். மேலும் அவரின் முன்னுரையைத் தொடர்ந்தவராக எனக்கு 9 ஏக்கர் நிலம் இருக்கு, சுமார் 1 ஏக்கரில் மண்புழுப் பண்ணை அமைத்துள்ளேன் 2 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டுள்ளேன், அரை ஏக்கரில் மரம் வளர்ப்பு. மீதம் உள்ள நிலங்களில் கரும்புப் பயிர் செய்துவருவதாகத் தெரிவித்தார்.

மண்புழு உரம் தயாரிப்பு முறை:
மண்புழு உரம் தயாரிப்பு என்பது மிகவும் சுலபமான முறையே அவர் தனது பண்ணையில்பயன்படுத்துவது மேல் மட்டப்புழு (ஆஸ்திரேலியா புழு) இது நமது நாட்டில் இருப்பது போல் மண்ணுக்குள் இருக்கும் மண்புழுவல்ல; உரம்தயாரிப்பதற்கென்றே வளர்க்கப்படும் புழுவாகும்.இதில் நமக்கு ஆச்சரியம் என்னெவென்றால் இவர் நிலத்திற்கு மேல் மேட்டுப் பாத்தி (மண்புழுவிற்கான உணவு) போல் அமைத்து வைத்துள்ளார், அதைக் கண்ட நாம் இது போன்ற பிரச்சனைகளைத் தவிற்பதற்காகவே இந்த ரக மண்புழுவை நாம் தேர்வு செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதற்கு உணவு எங்கு இருக்கிறதோ அங்கு மட்டுமேஉயிர் வாழும்

இவரது மண்புழுப் பண்ணையைச் சுற்றியும் மரம் வளர்த்து சீதோ­ண நிலையையும் நன்கு பராமரித்து வருகிறார். துல்லியமாகப் பாடத்தினையும் விவரிக்கின்றார். மண்புழுவுக்குத்தேவையான உணவினை வெளியில் இருந்து வாங்கி வருகிறார். (மண்புழு உணவு: சாணம், குப்பை (பிளாஸ்டிக், கல் அல்லாத), மரத்தூள், கரும்புச் சக்கை, தேங்காய் மஞ்சி போன்றமக்கும் அனைத்தும் நம்மிடம் மித மிஞ்சி இருக்கும் பொருட்கள்) வருடம் சுமார் 40 டன்சாணத்தினை வாங்குகிறார், 1 டன் சாணம் ரூ.1500/- என்கிற விதத்தில்..இதில் இவருக்கு 35 டன் மண்புழு உரம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாணம் வாங்குவதில் சிறித கவனம் தேவை என்றும் எச்சரிக்கை செய்கின்றார் புதிதாக இருக்கும் சாணத்தில் மீத்தேன் வாயுஇருக்கும் அதுவே 10 நாட்கள் கழித்துப் பயன்படுத்தும் பொழுது மீத்தேன் வாயு வெளியேற்றப்பட்டிருக்கும்.

அமைக்கும் முறை:
உயரம் – 2 1/2 அடி
அகலம் – 3 அடி
நீளம்தேவையான அளவு

மேலே குறிப்பிட்ட உயரம் மற்றும் அகலத்தினை நன்கு கவனத்தில் கொள்ளுதல் அவசியம். ஏனெனில் வெப்பம் அதிகமாகிவிடும் என்பதே அதற்கு காரணம். மண்புழுவிற்குகண் இல்லை என்றாலும் வெளிச்சம் இதற்கு எதிரி என்றே சொல்லலாம் . ஆகவே உணவைமேட்டுப்பாத்தி போல் அமைத்த பிறகு சணல் சாக்கு கொண்டு மூடி வைத்தல் அவசியம்.(சணல், சாக்கு கொண்டு மூடாமல் வெளிச்சம் இருக்கும் பட்சத்தில் மண்புழு தனது எச்சத்தினை(உரத்தினை) இடாமல் உணவுக் குவியலுக்குள்ளேயே இட்டு மேல்மட்டத்தில் நமக்கும் உரம்கிடைக்காமல் போய்விடும் மண்புழுக்களும் அதனுள்ளேயே இருப்பதனால் இறந்து விடும்) இவரின் விற்பனை விபரம்

மண்புழு – 1 கிலோரூ.500/-
மண்புழு உரம் – 1 கிலோரூ.5/-

இவர் தனக்கு சுமார் 80 வாடிக்கையாளர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். தனக்கு வரும்
ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருவதாகவும் கூறினார்.

பயன்படுத்தும் முறை:
மண்புழு உரத்தினை விவசாயிகள் அடியுரமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றவேண்டுகோள் விடுத்தார் (அடியுரம் என்பது மண்ணைப் பறித்து அதில் உரத்தினை வைத்து மேல் மண்ணை இட்டு மூட வேண்டும் . அடுத்த முறை கடைசி உழவு செய்வதற்கு முன்பு நிலத்தில் சிறு குவியல்களாக இட்டு உழவு செய்திட வேண்டும் அதற்கு அடுத்த முறையாக களைகள் வெட்டும் பருவத்திலும், மேட்டுப் பாத்தி அமைக்கும் பொழுதும் ஆகிய சமயங்களில்பயன்படுத்தலாம். இதன் நோக்கம் மண்ணிற்கு மேலே இடாமல் இருத்தல் அவசியம்என்பதையே குறிக்கின்றார்.)
1 ஏக்கர்ஒரு வருட பயிர்களுக்கு 2 டன் உரம் பயன்படுத்த வேண்டும்
(வாழை, கரும்பு, மஞ்சள்)

1 ஏக்கர் – 3 முதல் 6 மாத காலப் பயிர்களுக்கு 1 டன் உரம் பயன்படுத்த
வேண்டும். (நெல், கடலை, எள், மக்காச்சோளம், தக்காளி, கத்தரி)

மண்புழு உரத்தில் இருக்கும் சத்துக்கள்:
இதில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் தாது சத்துக்கள் என அனைத்து வகையானசத்துக்களும் உள்ளன. இதில் இரசாயன உரத்தில் இருப்பது போன்று உடனடியாகப் பயிர்களின் வளர்ச்சிக்கு எட்டாது மேலும் மண்புழு உரத்தினைப் பயன்படுத்தும் பொழுது மண்வளம்மேம்படுவதுடன் சில வருடங்களில் இரசாயன உரத்தின் தேவையே பயன்படாது என்றும் கூறினார்.

மண்புழு உரத்தின் உற்பத்தி பற்றித் தெரிவித்தவர் இது குளிர்காலங்களில் அதிக உற்பத்திகிடைக்கும் என்றும் தெரிவித்தார். சாண மேட்டுப் பாத்தியில் சுமார் 4 சதுர அடிக்கு ஒரு லோமண்புழுவினை விடுதல் நல்ல உற்பத்தியினைத் தரும். அதே போல் நன்கு முதிர்ச்சியடைந்தமண்புழு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையிடும், ஒரு முட்டையிலிருந்து சுமார் 2 முதல் 3 மண்புழுக்கள் உருவாகும். இதன் வளர்ச்சித் திறன் என்பது சுமார் 18 முதல் 19 நாட்களில்முட்டையிடுவதற்குத் தயார் ஆகிவிடும். ஒரு மண்புழு 2 ஆண்டுக் காலம் உயிர் வாழக்கூடியதுஎன்கிற தகவலையும் நமக்கு வழங்கினார்.

சராசரியாக வெயில் காலங்களில் உற்பத்தி மூன்றுமாதங்கள் ஆகிவிடும். அதுவே குளிர் காலங்களில் இரண்டு மாதங்களில் நமக்குத் தேவையானஉரம் கிடைத்து விடும். அதிலும் மண்புழுவிற்குப் பிடித்தமான குப்பையாகவும் நல்ல குளிர்காலமாகவும் இருக்கும் பட்சத்தில் நமக்கு ஒரே மாதத்தில் உற்பத்தியைக் கொண்டு வரமுடியும் என்றும் தெளிவாக நமக்கு விளக்கினார்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top