ஒரு வழக்கினை
நடத்தும் நீதிபதி, அந்த வழக்கில்
மரண தண்டனை தீர்ப்பை வழங்கி அதனை நிறைவு செய்யும் போது தீர்ப்பு எழுதிய பேனாவை
உடைப்பதை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஒரு உயிரை
கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அது அநீதியான ஒன்று தான் என்று தான் பழைய
காலங்களில் கருதப்பட்டு வந்தது.
அந்த
காரணத்தினாலேயே, தற்போதைய
காலத்தில் மரண தண்டனை வழங்கினாலும், மனிதாபிமானம் மற்றும்
குற்றவாளியின் நல்லொழுக்கம் கருதி, மரண தண்டனைகள் ஆயுள்
தண்டனையாக குறைக்கப்படுகின்றன.
இந்த முறை
பிரிட்டிஷ் காலத்தினர் பின்பற்றிய முறை. அவர்களின் ஆட்சி காலத்தின் போது, ஒருவரின் உயிரை பறிப்பதற்காக தீர்ப்பு
எழுதிய இந்த பேனாவின் நிப், இனி வேறு எதற்கும்
பயன்படுத்தக்கூடாது.
இது ஒரு
சோகத்தின் வெளிப்பாடு என்று பின்பற்றி வந்துள்ளனர்.
இந்த முறையே
தற்போது வரை பின்பற்றப்படுகிறது.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON