†
இன்றைய புனிதர் † (Saint of the Day) ( ஃபெப்ரவரி/ February 28 )
✠ அருளாளர்: டேனியல் ப்ரோட்டியர் ✠ ( Blessed Daniel Brottier )
ரோமன் கத்தோலிக்க குரு : (Roman Catholic Priest)
பிறப்பு : 7 செப்டம்பர் 1876 லா-ஃபெர்ட்-செயின்டஸிர், ஃபிரான்ஸ்
(La Ferté-Saint-Cyr, Loir-et-Cher, France)
(La Ferté-Saint-Cyr, Loir-et-Cher, France)
இறப்பு : 28 ஃபெப்ரவரி 1936 (வயது 59) பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France)
முக்திபேறு பட்டம் : 25 நவம்பர் 1984 திருத்தந்தை 2ம் ஜான் பால் (Pope John Paul II)
நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 28
அருளாளர்: டேனியல் ப்ரோட்டியர், ஒரு ஃபிரென்ச் ரோமன் கத்தோலிக்க தூய ஆவியானவரின் சபையைச் சேர்ந்த
குரு ஆவார். இவரது முழுப் பெயர், "டேனியல் ஜூலஸ் அலெக்ஸிஸ்
ப்ரோட்டியர்" (Daniel Jules Alexis Brottier) ஆகும். இவர் மேற்கு ஆபிரிக்காவின் "செனெகல்" (Senegal) நாட்டில் மறை போதகராக பணியாற்றினார். பாரிஸ் நகரின் புறநகர்ப்
பகுதியான "ஒடேயுல்" (Auteuil) எனும் இடத்தில் அனாதைகள்
இல்லத்தையும் நடத்தினார்.
டேனியல் 1876ல்,
"ஜீன்-பாப்டிஸ்ட் ப்ரோட்டியர்"
(Jean-Baptiste
Brottier) என்ற தந்தைக்கும்
"ஹெர்மினி" (Herminie) என்ற தாயாருக்கும் பிறந்தார். தமது
பத்து வயதில் புது நன்மை (First Communion) பெற்ற இவர், அடுத்த வருடமே இளைஞர்களுக்கான குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.
தமது இருபது வயதில் "ப்லாயிஸ்" (Blois) நகரில் ஒரு வருட இராணுவ சேவை
புரிந்தார். ஃபிரான்ஸ் நாட்டின் "போன்ட்லேவோய்" (Pontlevoy) எனும் இடத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியராக
பணியாற்ற அனுப்பப்பட்டார். அதன் பின்னர், 22 அக்டோபர் 1899ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
ஆசிரியர் பணியில் முழுதும்
அமைதியடையாத டேனியல் மறை போதக பணியாற்ற முடிவு செய்தார். பின்னர் அவர் 1902ல் தூய ஆவியாரின் சபையில் இணைந்தார். அங்கே துறவறப் புகுநிலையை
பூர்த்தி செய்தார். 1903ல் அச்சபை அவரை மேற்கு
ஆபிரிக்காவின் "செனெகல்" (Senegal) நாட்டில் மறை போதகராக பணியாற்ற
அனுப்பியது. எட்டு வருடங்கள் அங்கே பணியாற்றிய அவர், தமது
உடல்நிலையில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக 1911ல் ஃபிரான்ஸ் திரும்பினார்.
முதல் உலகப்போர் வெடித்ததும் அவர்
ஃபிரான்ஸ் நாட்டின் இராணுவப்படைகளின் தன்னார்வ மறை போதகராக இணைந்தார். நான்கு
வருடங்களுக்கும் மேலாக யுத்த பூமியில் இராணுவ வீரர்களிடையே மதப் பணியாற்றிய
டேனியல் ஒருபோதும் தமது பணியில் சுணங்கியதேயில்லை. மாறாக, தமது உயிரைப் பணயம் வைத்து மறை போதக பணியாற்றினார். ஐம்பத்திஇரண்டு
கால யுத்த பணியின்போது, ஒரு சிறு காயம் கூட இன்றி தப்பினார்
என்பதே பெரும் அதிசயமாக கருதப்படுகின்றது.
Signature of Daniel Brottier
முதல் உலகப்போரின் பின்னர், நவம்பர் 1923ல் பாரிஸ் நகரின் புறநகர்ப்
பகுதியில் அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றினை நடத்த
டேனியல் அழைக்கப்பட்டார். சுமார் 140 அனாதைகளுடன் பணியைத் தொடங்கிய அவர்
பதின்மூன்று வருடங்கள் அங்கே பணியாற்றினார். அவர் மரணமடையும் போது 1400க்கும் மேற்பட்ட அனாதைகள் அங்கே பராமரிக்கப்பட்டனர்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON