சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை.
எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும். உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன் மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர்
சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும். இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு.
இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். இதன் இலை கொஞ்சம் பவுடர் பூசியது போல மென்மையாக இருக்கும். பழமும் கொஞ்சம் மஞ்சள்-ஆரஞ்சு கலரில் இருக்கும்.
பழத்தின் ருசி என்று பார்த்தால் ரொம்ப விசேசமாய் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தோட்டத்தில் சாதாரணமாய் வளர்ந்து காய்க்கும் காயாக இருந்தாலும் ஆசையாய் விதை வாங்கி வளர்த்து வெற்றிகரமாய் பழம் பறித்து சாப்பிட்டதில் சந்தோசமே
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON