Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: நாடி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும் , அந்த நோயின் தனமையையம் முழுவது...

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.

நாடி என்றால் என்ன?
அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித
உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் உடல் மாற்றம்
மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.

பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத
ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.

நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும். இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன். 

வாத நாடி நாடி 
அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் 

பித்த நாடி நாடி
அதாவது பல்ஸ்  பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது .

கப நாடி நாடி 
அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி.

ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது

பூத நாடி நாடி
அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும். 

குரு நாடி  : 
குரு நாடி என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின்
கூட்டு கலவை தான் குரு நாடி.

பிரனான் நாடி 
இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது.

ஆங்கில மருத்தவம் அல்லது  ஸ்டெத்தஸ்கோப் பல வருடங்களுக்கு முன் தான்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது.

நாடி எப்படி உண்டாகிறது?நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம்உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடிஅதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்


.நாடி பார்க்கும் முறை:
மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல்)ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும்.
பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும்,தளர்த்தியும் பார்த்தால் நாடியின்  தன்மையை  முழுமையாக அறிந்து கொள்ளலாம்.(30 வினாடிகள் துடிப்பு கவனித்து அதை 2 ல் பெருக்கி வருவது நமது துடிப்பு எண்ணிக்கை.)18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சராசரியாக 70-100/ நிமிடம் துடிப்புகள். மற்றவர்களுக்கு சராசரியாக 60-100/நிமிடம் துடிப்புகள் இருக்க வேண்டும்.

நாடி நிதானம் :
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடிநடு விரல் மூலம் கீழ் பித்த நாடிமோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம்இவை தவிர பூத நாடிகுரு நாடி என இரு நாடிகள் உண்டுபெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும்ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.


எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால்அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும்பித்த நாடி ஆமை மாதிரியும்அட்டை மாதிரியும்சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும்தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10.குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடிகளின் தன்மை:வாத நாடி:
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும்.
வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும்
ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.வாத நாடி அறிகுறிகள்: உடல்
குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல்
கொஞ்சமாகவும் வெளியாகும்.

பித்த நாடி:
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம்,
குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல
பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள்
உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில
சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

பித்த நாடிஅறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும்.
சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.சிலேத்தும
நாடி:சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து
நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு,
வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சுமற்றும் விலாப்பகுதியில்வலி
இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர்
குறைவாகப் போகும்.சிலேத்தும நாடி அறிகுறிகள்: உடல் அடிக்கடி வியர்க்கும்.
முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும்.
கண்களில் பீளை கட்டும். 

நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.


உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில் - 15000
கண்களில் - 4000
செவியில் - 3300
மூக்கில் - 3380
பிடரியில் - 6000
கண்டத்தில் - 5000
கைகளில் - 3000
முண்டத்தில் - 2170
இடையின் கீழ் - 8000
விரல்களில் - 3000
லிங்கத்தில் - 7000
மூலத்தில் - 5000
சந்துகளில் - 2000
பாதத்தில் - 5150
மொத்தம் - 72000


நாடிகள் உள்ளன . நாடியைப் பற்றிய ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள் நமதுசித்தர்கள். அவர்கள் மேலும், வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளனர். 

ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம்.
மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது.

என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் இந்த நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

Post a Comment

CLICK TO SELECT EMOTICON

 
Top