இந்திய உணவுகள் என்று என்று இன்று நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகள் மற்றும் காய்கறிகள் உண்மையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வணிகர்களாலும், படையெடுத்து வந்த வேற்றுநாட்டு அரசர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். தக்காளி போர்ச்சுகல் நாட்டிலிருந்தும், பச்சை மிளகாய் மற்றும் கரும்பு மேற்கிந்திய தீவுகளில் இருந்தும் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாம்.
அதுபோலவே இன்று பரவலாக உண்ணப்படும் பிரியாணி பெர்சியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாகும். பின்னர் முகலாயர்கள் மூலம் இந்தியாவெங்கும் பரவியிருக்கிறது. காலபோக்கில் சில ஊர்களில் அங்கு கிடைக்கும் மசாலாப்பொருட்கள் மற்றும் அரிசியை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இந்தியாவில் கிடைக்கும் விதவிதமான பிரயாணிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
தலபாக்கட்டி பிரியாணி:
1957ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நாகசாமி நாயுடு என்பவரின் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டலில் உருவானதுதான் கமகமக்கும் தலபாக்கட்டி பிரியாணி. நாகசாமி நாயுடு எப்போதுமே தலைப்பாகை அணிந்திருப்பார் என்பதால் அவர் கண்டுபிடித்த பிரியாணி 'தலபாக்கட்டி பிரியாணி' என்ற பெயரே நிலைத்துவிட்டது.
சீரகசம்பா அரிசி கொண்டு சமைக்கப்படுவதே இதன் தனித்துவமான சுவைக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த பிரியாணி கிடைக்கும் தலபாக்கட்டி ஹோட்டல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல கிளைகள் கொண்டு இயங்கி வருகிறது.
தலசேரி பிரியாணி:
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி என்ற ஊர் பிரிட்டிஷ் காலத்திலேயே ஏலக்காய், மிளகு, பட்டை போன்ற மசாலாப்பொருட்கள் வணிகத்தின் மையமாக திகழ்ந்த ஊராகும். இங்கே கைமா அரிசி கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி அதிசுவையானது. இந்த பிரியாணியில் மாதுளை, அன்னாச்சி, பேரீச்சம்பழம் மற்றும் உலர்ந்த திராச்சை பழங்கள் சேர்க்கப்படுகின்றன.
ஆம்பூர் பிரியாணி:
வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆம்பூர் பிரியாணிக்கு பெயர்போன இடமாகும். ஆற்காடு நவாப்பிற்காக அவரது அரண்மனையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாம். ஆம்பூர் பிரியாணி இப்போது வீட்டிலேயே சமைத்து பலராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது.
ஹைதராபாத் பிரியாணி போன்றே தான் இதுவும் சமைக்கப்படுகிறது என்றாலும் ஆம்பூர் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசியும், கூடுதலாக மஞ்சள் மற்றும் தக்காளி சேர்ப்பதால் கிடைக்கும் சுவையும் இதனை தனித்துவமானதாக்கியது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள ஆம்பூரை நெருங்கும்போதே பிரியாணியின் மணம் நம்மை சூண்டி இழுக்கும்.
ஹைதராபாத் பிரியாணி போன்றே தான் இதுவும் சமைக்கப்படுகிறது என்றாலும் ஆம்பூர் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசியும், கூடுதலாக மஞ்சள் மற்றும் தக்காளி சேர்ப்பதால் கிடைக்கும் சுவையும் இதனை தனித்துவமானதாக்கியது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள ஆம்பூரை நெருங்கும்போதே பிரியாணியின் மணம் நம்மை சூண்டி இழுக்கும்.
லக்னௌ ஆவாதி பிரியாணி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் தயாரிக்கப்படும் பிரியாணி ஆவாதி பிரியாணி என்றழைக்கப்படுகிறது. லக்னோ பிரியாணியில் மாமிசம் தனியாகவும், அரிசி தனியாகவும் சமைக்கப்பட்டு பின்னர் ஒன்றாக கலக்கப்படுகிறது.
ஒரு முழு ஆட்டை சுத்தம் செய்து மசாலாப்பொருட்கள் மற்றும் தயிர் சேர்த்து ஊறவைத்து ஆவியில் வேகவைக்கின்றனர்.
பின்னர் தனியாக சமைக்கப்பட்ட அரிசியுடன் குங்குமப்பூ சாறு சேர்க்கப்பட்டு வேகவைக்கப்பட்ட முழு ஆட்டுடன் கலக்கப்படுகிறது. இந்த பிரியாணி லக்னோவை ஆண்ட நவாப்களுக்கு விருப்பமான உணவாக இருந்திருக்கிறது.
கொல்கத்தா பிரியாணி:
கொல்கத்தா பிரியாணி ஏறத்தாழ லக்னோ பிரியாணியை போன்ற சுவையுடையதே. அதற்கு காரணம் 19ஆம் நூற்றாண்டில் லக்னோவின் நவாப்பாக இருந்த வஜீத் அலி ஷா லக்னோவை விட்டு வெளியேறி கொல்கத்தாவிற்கு சென்ற போது தன்னுடைய தலைமை சமையல்காரரையும் உடன் அழைத்துச்சென்று கொல்கத்தாவில் கிடைக்கும் மசாலாப்பொருட்களை கொண்டு பிரியாணியை உருவாக்கியிருக்கிறார்.
லக்னோ பிரியாணியுடன் ஒப்பிடும்போது இது சற்றே காரம் குறைவானதாகும்.
பாம்பே பிரியாணி:
கடலோர நகரமான மும்பையில் மீன் பிரியாணி பிரபலமாகும். அதோடு இறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணியில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுவதால் ஒரு வித்தியாசமான சுவையை கொண்டிருகிறது.
பட்கள் பிரியாணி:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சனகன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கள் என்ற ஊரில் தயாரிக்கப்படும் பிரியாணி பாம்பே பிரியாணியை போன்றே இறைச்சியுடன் பல்வேறு காய்கறிகளும் சேர்த்து சமைக்கப்படுகிறது.
பிரியாணி சுற்றுலா:
உங்களுக்கும் இதுபோல எங்காவது சுவையான பிரியாணி கிடைக்கும் இடத்தை பற்றி தெரியுமென்றால் பின்னூட்டத்தில் அந்த தகவலை பகிர்ந்திடுங்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON