அன்றொஇட் ஸ்மார்ட் போன்
ஒன்றை வைத்து இருக்கும் அனைவருக்குமே ப்லே ஸ்டோர் என்ற வார்த்தை மிகவும்
பரீட்சியமான ஒன்றாகும். எம்முடைய அன்றொஇட் போனுக்கு தேவையான அனைத்து செயலிகளையும்
தரவிறக்கி கொள்ள கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்ட தலமே இந்த ப்லே ஸ்டோர்.
ஆகவே இன்றைய பதிவில்
ப்லே ஸ்டோர் உடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று
நினைக்கின்றேன்.
எம்முடைய அன்றொஇட்
ஸ்மார்ட் போனிற்கு ஏதேனும் ஒரு செயலியை தரவிறக்கி கொள்ள வேண்டுமென்றால் நாம்
முதலாவதாக செல்லும் இடமே இந்த ப்லே ஸ்டோர். இங்கு எமது ஸ்மார்ட் போனிற்கு தேவையான
அனைத்து செயலிகளையும் தரவிறக்கி கொள்ள முடியும்.
ப்லே ஸ்டோர்-இற்கு
சென்று பார்த்தால், அங்கு இலவசமான செயலிகளும் அதே போல் பணம் செலுத்தி
பெற்றுக்கொள்ள வேண்டிய செயலிகளும் காணப்படும். இலவசமாக உள்ள செயலிகளை நேரடியாக
தரவிறக்கி எமது ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் பணம் செலுத்தி பெற
வேண்டிய செயலிகளை எமது ஸ்மார்ட் போனிற்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால்,
கிரெடிட் காட் விபரங்கள் போன்றவற்றை வழங்கிய பின்னரே தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆகவே இன்றைய பதிவில்
ப்லே ஸ்டோர்-இல் காணப்படும் குறிப்பிட்ட சில பணம் செலுத்தி பெற வேண்டிய செயலிகளை
எப்படி எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனிற்கு இலவசமாக பெற்றுக்கொள்வது என்று
பார்ப்போம்.
கீழ்
வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட் போனிட்கான செயலிகளை உங்களது ஸ்மார்ட் போனில்
நிறுவுங்கள்.
இந்த செயளிகலானது
உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிட்கான ப்ரிமியம் செயலிகளை இலவசமாக வழங்க
கூடியவைகள். இவைகளை தினமும் உங்களது போனில் திறந்து பாருங்கள்.
இந்த செயலிகளின் மூலம்
ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணம் செலுத்தி பெற வேண்டிய அன்றொஇட்
செயலிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த செயலிகளில்
காட்டப்படும் பணம் செலுத்தி பெற வேண்டிய செயலிகளை குறிப்பிட்ட தினத்திற்குள் தரவிறக்கி
கொள்ளுங்கள். பெரும்பாலும் இலவசமாக தரவிறக்க கூடிய செயலிகள் ஒரு நாள் வரை நீடித்து
இருக்கும். அதற்குள் அந்த குறிப்பிட்ட செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON