தொழிநுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்திலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம், எம்முடைய நண்பர் உறவினர்களை தொடர்பு கொள்ள பெரும் பாலும் உபயோகிப்பது பேஸ்புக் வாட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற மேசென்ஜர் சேவைகளையேயாகும்.
மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் எம்முடைய உறவினர் நண்பர்களை தொடர்பு கொள்ள உதவும் இந்த சேவைகள், பல்வேறு பயனுள்ள வசதிகளை எமக்கு வழங்குகிறது.
இந்த அனைத்து சேவைகளும் தமது பயனர்களுக்கு வழங்கும் பொதுவான ஒரு சேவையாக, நீங்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டாரா என்பதை தெரிந்து கொள்வதும், அப்படி அவர் எமது செய்தியை படித்து விட்டால், அந்த செய்தி எப்போது படிக்கப்பட்டது என்ற நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதியையும் குறிப்பிடலாம்.
இந்த வசதியானது மிகவும் பயனுள்ள ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், சில சமயங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு தகவலை படித்தது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு தேவை ஏற்படலாம். ஆகவே இன்றைய பதிவில் ஒரு படி அட்வான்ஸ் ஆக சென்று உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.
இந்த சேவையை எமது ஸ்மார்ட் போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி. இந்த செயலியை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பித்து கீழே காட்டப்பட்டிருப்பது Got It போல் என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து கீழே காட்டியிருப்பது போல் I Understand என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் வாட்ஸ்அப் நண்பர்களின் மெசேஜ்-ஐ மட்டும் இந்த முறையில் வாசிக்க வேண்டுமா அல்லது வாட்ஸ்அப் குழுக்களின் மெசேஜ்-களையும் இந்த முறையை பயன்படுத்தி வாசிக்க வேண்டுமா என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
தெரிவு செய்த பின்னர் OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களது ஸ்மார்ட் போனில் கீழே காட்டப்பட்டிருப்பது போல் திரை ஒன்று தோன்றும். உங்களது வாட்ஸ்அப்-இற்கு வரும் மெசேஜ்-களை இந்த செயலி மூலம் திறந்து வாசித்துக்கொள்ள முடியும்.
(திறக்கும் விண்டோ-வில் 5 செக்கன் பொறுத்திருந்து 'ஸ்கிப் ஆட்' என்பதை கிளிக் செய்து விட்டு செயலியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.)
ஆகவே இந்த அருமையான செயலியை உங்களது அன்றொஇட் போனில் பயன்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்களை ஆன்லைன் செல்லாமல் வாசித்து கொள்ள முடியும்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON