ஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த
ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை
உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும்
சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள்
தடுக்கப்படும்.
15 கிராம் பச்சை நிற ஆலிவ் பழங்கள்
20 கலோரிகளையும், 15 கிராம் கருப்பு
நிற ஆலிவ் பழங்கள் 25 கலோரிகளையும் கொண்டிருக்கின்றன. ரெண்டுமே ஆலிவ் தானே பிறகேன் வித்தியாசம்?
கருப்பு நிற ஆலிவ் பழத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயே
அதிலிருக்கும் அதிக கலோரிகளுக்குக் காரணம்.
கருப்பு நிற ஆலிவ் பழங்கள் மரத்திலேயே
கனிய வைக்கப்பட்டு பின் பறிக்கப்படுகின்றன. மாறாக கனிவதற்கு கொஞ்சம் முன்னதாகவே
பறிக்கப்பட்டு, அவற்றிலிருக்கும் கசப்புத் தன்மை
குறைவதற்காக 6 முதல் 12
மாதங்களுக்கு பதப்படுத்தப்படுகின்றன பச்சை
நிற ஆலிவ்கள். பதப்படுத்தப்பட்ட கருப்பு நிற ஆலிவில் இருப்பதை விட
பதப்படுத்தப்பட்ட பச்சை நிற ஆலிவில்
இரண்டு மடங்கு சோடியம் இருக்கிறது. ஆலிவ் மரங்கள் அதிகபட்சமாக 2000 வருடங்கள் வரை உயிர் வாழும். உண்மையில், ஆலிவ்
எண்ணெய் என்பது எண்ணெய் அல்ல. ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் பழச்சாறு. “Extra
virgin” என்பது, ஆலிவ் பழங்களிலிருந்து
எடுக்கப்படும் முதல்தர எண்ணெய்,
Olive Tree
எக்ஸ்ட்ரா விர்ஜின்: (extra virgin): அதிகப் பக்குவப்படுத்தப் படாத, (சூடாக்காமல், அமிலங்கள் கலக்காமல்) முதல் தடவை
பிழிந்தவுடன் கிடைக்கும் எண்ணெய். சுத்தமான, இயற்கையான ஆலிவ்
வாசனையுடன் இருக்கும் எண்ணெய்.
விர்ஜின்: இரண்டாம் முறை பிழியும்போது
கிடைக்கும் எண்ணெய்.
ப்யூர்: வடிகட்டுதல் மற்றும் சில
சுத்திகரிப்புக்கு உட்பட்டது.
எக்ஸ்ட்ரா லைட்: மறுபடி மறுபடி
சுத்திகரிக்கப்பட்டும், சிறிது விர்ஜின்
ஆயில் சேர்க்கப்பட்டதும் ஆன எண்ணெய் இது. மிக சிறிதளவே ஆலிவ்வின் வாசனை இதில்
இருக்கும்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON