சென்னை மகாணத்தின் கவர்னராக இருந்த ஸ்டீபன் ரூம்போல் லூசிங்டன் 1829ல் ஊட்டி வந்தார். அப்போது உயர்ந்த மலை சிகரங்களை கண்டு பிரமிப்பு அடைந்தார். ஆங்கிலேயர்களுக்காக மட்டும் ஒரு தேவாலயத்தை ஊட்டியில் கட்ட வேண்டும் என தீர்மானித்தார். இதன்படி 1829 ஏப்ரல் 23ம் தேதி தேவாலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேய மன்னர் நான்காம் ஜார்ஜின் பிறந்தநாளில் கல்கத்தா பிஷப் ஜான் மத்தாய்ஸ் டர்னர் மேற்பார்வையில் கட்டப்பட்டது. 1830ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி தேவாலயம் கட்டும் பணி நிறைவடைந்தது.
தேவாலயத்தில் உள்ள மிகப்பெரிய தூண் அனைத்தும் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்னாவில் உள்ள திப்பு சுல்தான் கோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்களால் செய்யப்பட்டவை. அந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தேவாலயத்தில் ஸ்டெய்ன் கிளாஸ் எனப்படும் வர்ணம் பூசப்பட்ட மற்றும் ஒவிய வரையப்பட்ட கண்ணாடி பொருத்தப்பட்ட கதவு மற்றும் ஜன்னல் இன்றும் அதன் வர்ணம் மங்காமல் உள்ளன. மேலும், தரையில் மர இழைகளால் ஆன தரைவிரிப்பு போடப்பட்டுள்ளது.
அதை இழுத்தால் இசை வடிவிலான ஒசைவரும். இந்த தேவாலயத்தை கேப்டன் அன்டர்வுட் வடிவமைத்து கட்டினார். 19ம் நூற்றாண்டில் ரூ.24 ஆயிரத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. தற்போதும் இந்த தேவாலயத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் பாரம்பரியம் காக்கப்பட்டு வருகிறது. அப்போது அமைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடி இன்றும் பழமை மாறாமல் காக்கப்பட்டு வருகிறது.
தரையில் மர இழைகளால் ஆன தரை விரிப்பு போடப்பட்டுள்ளது. அதை இழுத்தால் இசை வடிவிலான ஒசைவரும்.

Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON