1. மூலிகையின் பெயர் :-
அறுகம்புல்.
2. தாவரப்பெயர் :- CYNODON
DACTYLON.
3. தாவரக்குடும்பம் :- POACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :-
சமூலம். (முழுதும்)
5. வளரியல்பு :- அறுகம்புல்
எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய
தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும்.
இது சல்லிவேர் முடுச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி
செய்யப்படுகிறது.
6. மருத்துவப் பயன்கள் :- அறுகங்கட்டை உடல் தாது
வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய்
நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
கணுநீக்கிய
அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக்
காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.
வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
கணுநீக்கிய
அறுகம்புல் சமூலம் 30 கரிம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20
முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். அறிவு மிகுந்து
முக வசீகரம் உண்டாகும்.
அறுகம்புல்
சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில்
கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால்
நீர்கடுப்பு, சிறுநீருடன்
இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
அறுகம்புல்
30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.
வேண்டிய
அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சழ் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம்
கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.
அறுகம்
வேர் 30 கிராம், சிறுகீரை
வேர் 15 கிராம், மிளகு
5 கிராம், சீரகம்
5 கிராம், ஒரு
லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு
தணியும். ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)
அறுகு
சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில்
வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக்
கண்நோய்கள் தீரும்.
ஒரு
கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8
லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர்
நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20
கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக்
கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத எண்ணெயை (அறுகுத்தைலம்)
கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.
அறுகம்
வேர், நன்னாரி
வேர், ஆவரம்
வேர்ப்பட்டை, குமரி
வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில்
போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க
மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON